வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)

#nv
வாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்து கீறல் போட்டுக் கொள்ளவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ளவும். இதனை மீன் துண்டுகளின் மேல் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
அகன்ற கடாயில் எண்ணெய் சூடானதும் மீன் துண்டுகளை இரண்டு பக்கம் திருப்பி போட்டு பொரிக்கவும். பொரித்த துண்டுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- 3
அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் வைத்துக் கொண்டு இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாடை போன பின், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்துக்கொண்டு, தக்காளியையும் சேர்த்து, தக்காளி மசியும்வரை வதக்கவும்.
- 4
இதில் மேலே குறிப்பிட்டுள்ள பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.கூடவே தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.வதங்கியதும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து மசாலாவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 5
மீன் துண்டுகளின் எண்ணிக்கையில் வாழை இலைகளை சதுரமாக வெட்டி கழுவி துடைத்து கொள்ளவும். இந்த இலைகளை அடுப்பின் சூட்டில் வாட்டிக் கொள்ளவும். இந்த வாழை இலையின் மீது தயார் செய்த வெங்காய தக்காளி மசாலாவை சிறிது வைத்து பரப்பவும்.
- 6
அதற்குமேல் ஒரு மீனை வைக்கவும். அதன் மேல் மீண்டும் மசாலாவை வைக்கவும். நான்கு புறமும் இதனை மடித்துக் கொள்ளவும்.
- 7
வாழை நார் அல்லது பூக்கட்டும் நூலைக் கொண்டு வாழை இலையில் உள்ள மீனை கட்டிக்கொள்ளவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து வைக்கவும். மீண்டும் அதே கடாயில் தயார் செய்த மீன்களை வைக்கவும். அடுப்பை ஆன் செய்து, இரண்டு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதனை 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு இன்னொரு பக்கம் திருப்பி போடவும். இதனை மூடி போட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.
- 8
அடுப்பை அனைத்து வாழையிலை மீனை சுடசுட சாதத்துடன் பரிமாறவும்.குணங்கள் அதிகம் நிறைந்த வாழை இலையோடு மீன் சேர்த்து சமைக்கும் பொழுது ஆரோக்கியம் கூடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
-
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash -
-
-
-
மசாலா ரவை மீன் வறுவல் (Rava Meen Varuval Recipe in Tamil)
#ரவை#onerecipeonetreeசுவையான மீன் ரோஸ்ட்/வறுவல் Pavithra Prasadkumar -
அரைத்த மசாலா மீன் வறுவல்
பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல் Cookingf4 u subarna -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (2)