உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை குருமா (Urulai, kondakadalai kuruma recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

#ve

உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை குருமா (Urulai, kondakadalai kuruma recipe in tamil)

#ve

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
4பேர்
  1. 1/2கிலோ கொண்டக்கடலை
  2. 3உருளைக்கிழங்கு
  3. வதக்கி அரைக்க:
  4. 1 வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 1/2துண்டு இஞ்சி
  7. 4பல் பூண்டு
  8. 1டீஸ்பூன் சோம்பு
  9. 1டீஸ்பூன் சீரகம்
  10. 11/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  13. 1டீஸ்பூன் மல்லித்தூள்
  14. 1/2டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  15. வதக்கவும்:
  16. 1பிரியாணி இலை, பட்டை
  17. 2 கிராம்பு, ஏலக்காய்
  18. 1வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  19. 1/2 தக்காளி பொடியாக நறுக்கவும்
  20. ஏற்கனவே அரைத்த விழுது
  21. உப்பு
  22. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    கொண்டக்கடலை முன்னாடி இரவே ஊறவைத்து, மறுநாள் அதை சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், பெரிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி, இதனை ஆறவிட்டு அரைத்து கொள்ளவும்.

  4. 4

    மறுபடியும், அதே வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை,லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.

  5. 5

    பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.பின் வேகவைத்த கொண்டக்கடலையை சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

  6. 6

    நன்கு சுண்டியவுடன், உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

  7. 7

    இதனை சப்பாத்தி, இட்லி, தோசையுடன் பரிமாறவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes