🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன.

🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)

#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 150 கிராம்வேக வைத்த ராஜ்மா
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1 மேசைக்கரண்டிஇஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் விழுது
  5. கருவேப்பிலை - சிறிதளவு
  6. 2பிரிஞ்சி இலை
  7. 4கிராம்பு
  8. 2ஏலக்காய்
  9. 1 தே.கசோம்பு
  10. பட்டை- சிறிய துண்டு
  11. 1நட்சத்திர சோம்பு
  12. 1/4 தே.ககரம் மசாலா
  13. 1/2 தே.கமிளகாய் தூள்
  14. மஞ்சள் தூள் - சிறிதளவு
  15. 1 தே.ககாஷ்மீரி மிளகாய்த்தூள்
  16. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ராஜ்மா பீன்ஸை 8 மணி நேரம் ஊறவைத்து. குக்கரில் 6 அல்லது 7 விசில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    மசாலா பொருட்கள் பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுதை பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும்.

  3. 3

    அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதங்கியதும் மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். (மிளகாய்த்தூள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்)

  4. 4

    அதில் வேக வைத்த ராஜ்மா பீன்ஸ் (அனைத்தையும் சேர்த்து விடாமல் 2 மேஜை கரண்டி அளவு ராஜ்மா பீன்ஸ் சேமித்து வைக்கவும்) சேர்த்து இரண்டு நிமிடம் வதங்கியதும். வேகவைத்த தண்ணீர், காஷ்மீரி மிளகாய் தூள், சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  5. 5

    பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். சிறிதளவு ராஜ்மா பீன்ஸை விழுதாக அரைத்து சேர்த்துக் கொண்டால் கிரேவி கட்டியாக கிடைக்கும்.

  6. 6

    அரைத்த கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும்

  7. 7

    கமகமக்கும் ராஜ்மா கிரேவி தயார். இது சாதம், சப்பாத்தி, அனைத்திற்கும் ஏற்ற அட்டகாசமான சைட் டிஷ் ஆக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes