சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு (Kathirikkai kothsu recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

#ve

சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு (Kathirikkai kothsu recipe in tamil)

#ve

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4நபர்
  1. வறுத்து அரைக்க:
  2. 2ஸ்பூன் எண்ணெய்
  3. 3ஸ்பூன் வரகொத்தமல்லி
  4. 1/4டீஸ்பூன் வெந்தயம்
  5. 1/2டீஸ்பூன் சீரகம்
  6. 2டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 7காய்ந்த மிளகாய்
  8. பொரிக்கவும்:
  9. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. 1/2கிலோ கத்திரிக்காய்
  11. வதக்கவும்:
  12. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. 1/2டீஸ்பூன் கடுகு
  14. 1/2டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  15. 1கைப்பிடி கறிவேப்பிலை
  16. 1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  17. 1 வெங்காயம்
  18. 1 தக்காளி
  19. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  20. 1/2கப் புளிக்கரைசல்
  21. வறுத்து அரைத்த பவுடர்
  22. 1 டம்ளர் தண்ணீர்
  23. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வரகொத்தமல்லி, வரமிளகாய், வெந்தயம், சீரகம்,கடலைப்பருப்பு எல்லாவற்றையும் மிதமான தீயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

  2. 2

    மறுபடியும், அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி, அதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.பின் அதனை கையால் மசித்து கொள்ளவும்.

  3. 3

    மறுபடியும் அதே கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து கொள்ளவும்.

  5. 5

    புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். ஏற்கனவே வறுத்து அரைத்த பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.

  7. 7

    சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு ரெடி.. இதனை இட்லி, தோசை, பொங்கல் இதனுடன் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes