செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி 40 நிமிடங்
நான்கு பேருக்கு
  1. 500 கிராம் மட்டன்
  2. 300 கிராம் சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 1/2 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  5. 1 1/2 ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
  6. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1பிரியாணி இலை
  9. இரண்டு துண்டு பட்டை
  10. மூன்று கிராம்பு
  11. ஒரு ஏலக்காய்
  12. ஒரு ஸ்பூன் சோம்பு
  13. ஒரு ஸ்பூன் சீரகம்
  14. அரை ஸ்பூன் மிளகு
  15. தேவையானஅளவு உப்பு
  16. தேவையானஅளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1மணி 40 நிமிடங்
  1. 1

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதனுடன் சிறிது இஞ்சி பூண்டு சிறிது மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் சோம்பு சீரகம் மிளகு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும் அது ஆறிய பிறகு நன்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பிரியாணி இலை ஒரு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் தக்காளி கலவையில் வேக வைத்த மட்டன் சேர்த்து மிளகாய் தூள் மல்லித் தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும் பிறகு வறுத்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்

  5. 5

    குக்கரில் உள்ள மட்டனை நன்றாக கலந்து விட்டு குக்கர் மூடி போட்டு 5 விசில் விட்டு இறக்கினாள் அருமையான சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes