அக்ரஹார புளியோதரை(Puliyotharai recipe in tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

அக்ரஹார புளியோதரை(Puliyotharai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 mahabharat
  1. 2கப் உதிரியாக வடித்த சாதம்
  2. 1/2கப் புளிக்கரைசல்
  3. 1/2ஸ்பூன் மஞ்சள்தூள்
  4. தலா அரை ஸ்பூன்கடுகு கடலைப்பருப்பு
  5. 2கொத்து கருவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு
  7. 2டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
  9. 5காய்ந்த மிளகாய்
  10. 1ஸ்பூன் தனியா
  11. 1/2ஸ்பூன் கடலைப்பருப்பு
  12. 1/4ஸ்பூன் வெந்தயம்
  13. 1சுண்டைக்காய் அளவு பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்துத்தரைக்க தேவையான பொருட்களை வெறும் சட்டியில் வறுத்து அரைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில்புளிக்கரைசலை ஊற்றவும்.

  3. 3

    அத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கும் பொழுது வறுத்தரைத்த பொடி மற்றும் வேர்க்கடலை சேர்த்து கெட்டியாக வந்ததும் இறக்கி வைக்கவும்.

  4. 4

    இப்பொழுது வடித்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் தேவையான அளவு புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளற சுவையான அக்ரஹார புளியோதரை ரெடி.

  5. 5

    இந்த புளியோதரை மை பிளேட்டில் வைத்து பரிமாற சுவையான அக்ரஹார புளியோதரை ரெடி.தேங்காய் துவயலுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes