எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. 4உருளைக்கிழங்கு
  2. பச்சை பட்டாணி 5 ஸ்பூன்
  3. புதினா தழை ஒரு கைப்பிடி மல்லித்தழை சிறிதளவு
  4. அரை டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை கரம் மசாலா
  5. 1பெரிய வெங்காயம் 4 பச்சை மிளகாய், மிகச் சிறிய துண்டு இஞ்சி
  6. தாளிப்பதற்கு ஒரு குழிக்கரண்டி ஆயில் கடுகு உளுந்து
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி வேக வைத்து நறுக்கி வைக்கவும். பட்டாணி வேக வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும் புதினா இலை ஒரு கைப்பிடி,மல்லித்தழை ஒரு கைப்பிடி அலசி வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.மல்லித்தழை புதினா தழை சேர்த்து வதக்கவும். வேகவைத்த பட்டாணி,உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் சாம்பார் தூள் கரம் மசாலா தூள் உப்பு தூவி நன்கு கலந்து விடவும்.நன்கு சுருள வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து ஒரு 5 நிமிடம் மூடி வைத்து வதக்கி எடுக்கவும்.

  3. 3

    மல்லி புதினா வாசனையுடன் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி பொடிமாஸ் தயார். நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes