சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை சம்பா ரவையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து பாலை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் படத்தில் காட்டியவாறு கோதுமை ரப்பர் போல் வரும்வரை அரைத்து எடுத்து பால் எடுக்கவும் ரப்பர் போல் வந்தது பிறகு பால் எடுக்கக்கூடாது (குறைந்தது மூன்று முறை மட்டும் மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்)
- 2
அரைத்து எடுத்த பால் ஒரு கப் எனில் இதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்... 4மணி நேரம் கழித்து தண்ணீர் தனியாக பிரிந்து வரும் தண்ணீரை வடித்து மாவு அடியில் தங்கியிருக்கும் இத்துடன் 4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
அடி அகலமான கனமான பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கரையும் வரை கிளறவும் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கேரமல் ஆகும் வரை கலக்கவும் (கேரமல் கலவை சேர்ப்பதனால் அல்வா இயற்கையான நிறத்தில் வரும்)
- 4
சர்க்கரை நன்றாக கரைந்து பிறகு கேரமல் கலவையை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் இதனுடன் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்
- 5
20 நிமிடம் கழித்து கலவை கெட்டியாகி வரும் அப்பொழுது நெய் சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 6
ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு தடவையும் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும் (மொத்தம் 4 முறை இதேபோல் சேர்க்கவும்)
- 7
இறுதியாக அனைத்து நெய்யையும் சேர்க்கவும் இத்துடன் ஏலக்காய்த்தூள் பொடியாக நறுக்கிய முந்திரி சேர்த்து நன்றாக கலக்கவும், இறுதியாக 1 மணி நேரம் 15 நிமிடம் கழித்து படத்தில் காட்டியவாறு அல்வாவின் நிறம் மாறி நெய் வெளியேறி கடாயில் ஒட்டாமல் வரவேண்டும்
- 8
இப்போது அடுப்பை அணைத்து 10 நிமிடம் விடவும் 10 நிமிடம் கழித்து சுடசுட அல்வாவை பரிமாறவும்
- 9
சுட சுட சூப்பரான திருநெல்வேலி அல்வா தயார்
Similar Recipes
-
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
-
-
தயிர் அல்வா
#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட் (20)