எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஒரு பாக்ஸ் காளான்
  2. 300 கிராம் துளசி பொன்னி அரிசி
  3. 2பெரிய தக்காளி
  4. 3பெரிய வெங்காயம்
  5. ஒரு பக்கெட் பிரியாணி மசாலா
  6. ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள்
  7. அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. சிறிதளவுபுதினா
  9. தேவையான அளவுகொஞ்சம்கொத்தமல்லி இலை
  10. நாலு ஸ்பூன் தயிர்
  11. ரெண்டு ஸ்பூன் நெய்
  12. 1/2 எலுமிச்சம்பழம்
  13. 2 குழிக்கரண்டி சமையல் எண்ணெய்
  14. 1பிரியாணி இலை
  15. 1அன்னாசிப் பூ
  16. சிறியதுண்டு பட்டை
  17. 2ஏலக்காய்
  18. 3 கிராம்பு
  19. தேவையானஅளவு உப்பு
  20. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசியைக் கழுவி தேவையான அளவு தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும் வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைக்க தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்

  2. 2

    குக்கரில் சமையல் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் பிரியாணி மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும் தயிரை சேர்த்து வதக்கவும்

  6. 6

    காளானை சுத்தம் செய்து இரண்டு மூன்றாக வெட்டி காளானை சேர்த்து வதக்கவும்

  7. 7

    பிறகு அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி தேவையான அளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்

  8. 8

    குக்கரை விசில் போடாமல் மூடி வைத்து தண்ணீர் வற்றும் அளவு அரிசி வேகும் அளவிற்கு வேக விட்டு ஒரு விசில் விட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்

  9. 9

    விசில் அடங்கியவுடன் உட்கார்ந்து பொடியை கலக்கவும் அடி வரை கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டைல் காளான் பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes