எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் பன்னீர்
  2. 4 பெரிய தக்காளி
  3. 2பெரிய வெங்காயம்
  4. 7 முழு முந்திரி
  5. 2பச்சை மிளகாய்
  6. 3 காய்ந்த மிளகாய்
  7. 1பிரியாணி இலை
  8. சிறியதுண்டு பட்டை
  9. 2 ஏலக்காய்
  10. 1அண்ணாச்சி பூ
  11. 3கிராம்பு
  12. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. 8பல் பூண்டு
  15. சிறியதுண்டு இஞ்சி
  16. ஒரு ஸ்பூன் சீரகம்
  17. அரை ஸ்பூன் கரம் மசாலா
  18. ரெண்டு ஸ்பூன் பட்டர்
  19. அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  20. தேவையானஅளவு உப்பு
  21. தேவையானஅளவு தண்ணீர்
  22. ஒரு கொத்து கொத்தமல்லி இலை
  23. தேவையானஅளவு சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பனீரை சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் அரை ஸ்பூன் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து வைத்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    30 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை நன்கு முறுகலாக வேகும் படி இரண்டு புறமும் திருப்பிவிட்டு வேக விட்டு எடுக்கவும்

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை அன்னாசிப்பூ ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை மற்றும் சீரகம் முந்திரி பருப்பு வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்

  5. 5

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுக்கவும்

  6. 6

    அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் பட்டர் போட்டு உருகியதும் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி கலவை மசாலாவை ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    வறுத்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும் தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes