பிரட்,சென்னா மசாலா

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#vattaram#week9
ஈரோட்டில்,ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்
அல்லது வேலை பார்ப்பவர்களுக்கு,ஞாயிறன்று வழங்கப்படும், இந்த பிரட், சென்னா மசாலா மிக பிரபலம்.

பிரட்,சென்னா மசாலா

#vattaram#week9
ஈரோட்டில்,ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்
அல்லது வேலை பார்ப்பவர்களுக்கு,ஞாயிறன்று வழங்கப்படும், இந்த பிரட், சென்னா மசாலா மிக பிரபலம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1.5கப் வெள்ளைசுண்டல்
  2. அரைக்க:
  3. (1பெரிய வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1பட்டை
  6. 1கிராம்பு
  7. 1ஏலக்காய்,
  8. 1.5டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது)
  9. தாளிக்க:
  10. ( 2டீஸ்பூன் கடலெண்ணெய்
  11. 1பிரியாணிஇலை
  12. பாதி பெரியவெங்காயம்
  13. கறிவேப்பிலை
  14. 1மிளகாய்)
  15. மசாலா பொருட்கள்:
  16. (1.5 டீஸ்பூன் மல்லி தூள்
  17. 1/2 டீஸ்பூன் கரம்மசாலா
  18. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  19. 1டீஸ்பூன் சீரகம் தூள்
  20. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்)
  21. பாதி எலுமிச்சம் பழச்சாறு
  22. 1/2டீஸ்பூன் சீரகம் தூள் கடைசியாக சேர்க்க
  23. தேவையானஅளவு உப்பு
  24. தேவையானஅளவு வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரைக்க கொடுத்த பொருட்களை அரைக்கவும்.

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை மற்றும் நறுக்கிய பாதி வெங்காயம்,மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

  5. 5

    பின் 8 மணி நேரம் ஊற வைத்த சுண்டலை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து கிளறவும். 750ml தண்ணீர் சேர்த்து உப்பு பார்த்து குக்கரை மூடி 7 விசில் விடவும்.

  6. 6

    குக்கரை திறந்து,மறுபடியும் கிரேவியை கொதிக்க விடவும். வெந்த சுண்டலில் 2 குழி கரண்டி அளவுக்கு தனியே எடுத்து,ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கிரேவி இல் சேர்க்கவும்.

  7. 7

    கிரேவி கொதித்தவுடன் 1/2ஸ்பூன் சீரகம் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    இறக்கிய பின்,பாதி எலுமிச்சம்பழ சாறு, மல்லி இலை தூவி கலந்து விட்டு பரிமாறவும்.

  8. 8

    தோசை தவாவில் வெண்ணெய் சேர்த்து பிரட் ஐ மாற்றி போட்டு எடுத்து கொள்ளவும்

  9. 9

    இந்த பிரட் மற்றும் சென்னா மசாலா காம்பினேஷன் அவ்ளோ சுவையாக இருக்கும். முயன்று பாருங்களேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes