பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2நபர்கள்
  1. 200கிராம் சீரகசம்பா அரிசி
  2. 50கிராம் பட்டர் பீன்ஸ்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1பெரிய தக்காளி
  5. 15புதினா இலை
  6. கொத்தமல்லிதழை
  7. 2பச்சை மிளகாய்
  8. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. 1/2ஸ்பூன் மல்லி தூள்
  10. 1/2ஸ்பூன் மிளகாய் பொடி
  11. 1/4ஸ்பூன் கரமசாலா
  12. 1ஸ்பூன் தயிர்
  13. 1ஸ்பூன் நெய்
  14. 4ஸ்பூன் ஆயில்
  15. தாளிக்க:
  16. 1சின்ன பட்டை
  17. 1கிராம்பு
  18. 1பிரிஞ்சி இலை
  19. 1அன்னாசிபூ
  20. 1மராட்டி மொக்கு
  21. 1ஏலக்காய்
  22. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    பட்டர் பீன்சை 8மணி நேரம் ஊறவைத்து, 2 விசில் விட்டு வேகவைக்கவும்.

  2. 2

    அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    குக்கரில், நெய் விட்டு, பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் பிரவும் கலர் வந்ததும், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அடுத்து தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி நன்கு மைய வதங்க வேண்டும்.

  7. 7

    பிறகு அதில் வேகவைத்த பட்டர் பீன்ஸ், மல்லி தூள்,

  8. 8

    மிளகாய் தூள், உப்பு, கரமசாலா சேர்த்து வதக்கவும்.

  9. 9

    2 நிமிடம் வதக்கிய பிறகு தயிர் சேர்த்து கலந்து விடவும்.

  10. 10

    அடுத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  11. 11

    கொதித்ததும் உப்பு செக் பண்ணிட்டு அரிசி சேர்க்கவும். அரிசி சேர்த்த பிறகு கலந்து விட்டு குக்கரை மூடிவைக்கவும்.

  12. 12

    2 விசில் வந்தால் போதும். பிரியாணி ரெடி.

  13. 13

    ஸ்டீம் போனதும் குக்கரை ஓப்பன் பண்ணவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes