பாப்கார்ன் சிக்கன் - KFC ஸ்பெஷல்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

பாப்கார்ன் சிக்கன் - KFC ஸ்பெஷல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
5 பேர்
  1. 300 கிராம் - கோழி
  2. தலா 1 ½ தேக்கரண்டி - கறி மசாலா + சோள மாவு + உப்பு
  3. தலா 1 தேக்கரண்டி - சோயா சாஸ் + இஞ்சி பூண்டு விழுது
  4. ½ தேக்கரண்டி - மிளகுத்தூள்
  5. 1 - முட்டை
  6. 1½ கப் - பேன்க்கோ ப்ரெட் கரம்ப்ஸ்
  7. 3 கப் - எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு அகன்ற பாத்திரத்தில் நன்றாக கழுவிய, சிறிய துண்டுகளாக்கப்பட்ட கோழி இறைச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.இத்துடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.

  2. 2

    மேலும் கறி மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ் மற்றும் சோள மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

  3. 3

    எல்லாவற்றையும் சேர்த்தப் பின்னர் நன்றாக பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    பின்பு இந்த கோழி துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து நன்கு அடித்த முட்டையில் முக்கி எடுத்து உடனே பேன்க்கோ பிரட் க்ரம்ஸிலும் பிரட்டி விடவும்.

  5. 5

    இப்படி எல்லா கோழி துண்டுகளையும் செய்து முடித்ததும். சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பாப்கார்ன் சிக்கன் தயார்.(கட்டாயமாக டீப் ஃபரை தான் பண்ண வேண்டும்.சேலோ ஃபரை செய்தால் எண்ணெய் குடிக்கும் அதனால் இம்முறையை தவிர்க்கவும்).

  6. 6

    மிகவும் ஒரு அருமையான ஸ்னக் (சிற்றுண்டி) இந்த பாப்கார்ன் சிக்கன். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னக் (சிற்றுண்டி) இது.இந்த லாக் டவ்ன் நேரத்தில் இதை செய்து அசத்தி உங்கள் குடும்பத்தாரின் பாராட்டைப் பெறுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes