தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1 கப் சீனி
  3. 1கப் நெய்
  4. 2 ஸ்பூன் கோதுமை மாவு
  5. 1 pinch சேகரி பவுடர்
  6. 10முந்திரி, கிஸ்மிஸ்
  7. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பு, சீனி, நெய் அனைத்தும் சம அளவு இருக்க வேண்டும் பின் பருப்பை நன்றாக கழுவி தண்ணீர்ச் சேர்த்து குக்கரீல் 4 விசில் வரை வைக்கவும்

  2. 2

    மசிந்து அவிந்த பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து மாவு பதத்திற்கு எடுக்கவும்

  3. 3

    பின் கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து எடுத்துக் கொள்ளவும் பின் கோதுமை மாவை அதே நெய்யில் இட்டு வறுக்கவும்

  4. 4

    பின் அரைத்த பருப்பை கோதுமை மாவு கட்டி பட்டு விடாமல் ஊற்றி கிளரவும் கட்டி பதத்திற்கு வரும் போது சீனியைச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    சீனி உருகியதும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும் பின் நிறத்திற்காக சேகரிப்பவுடரை தண்ணீர்ச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்

  6. 6

    பின் ஏலக்காய வாசனைக்காக சேர்த்துக் கொள்ளவும் பின் நெய் ஊற்றி கிளறவும்

  7. 7

    அல்வா திரண்டு வரும் பின் பொறித்தெடுத்த முந்திரி கி்ஸ்மிஸ்ச் சேர்த்து பின் அடுப்பை அனைத்து விடவும்

  8. 8

    சூடாக பரிமாறவும் சுவையான அசோக அல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes