ஜாமுன் பர்ஃபி

Mawiza
Mawiza @Mawiza

ஜாமுன் பர்ஃபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 நபர்கள்
  1. 2 கப்ஜாமுன் மிக்ஸ்
  2. 1/2 கப்பால் பவுடர்
  3. 1/2 கப்பால்
  4. 4 ஸ்பூன்மிக்ஸ்டு நட்ஸ்
  5. 1/2 ஸ்பூன்ஏலக்காய் பவுடர்
  6. 1/4 ஸ்பூன்நெய்
  7. 1/2 கப்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சர்க்கரை மற்றும் மூன்று ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் நெய் சேர்த்து அதன்பின் பால்,ஜாமுன் மிக்ஸ் பவுடர்,பால் பவுடர், சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  2. 2

    கட்டி ஏதும் விழுகாமல் நன்றாக கலந்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கை விடாமல் நன்றாக கிளறவும்.

  3. 3

    கடாயில் எதுவும் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும்.அதுவே சரியான பதம். அதிக நேரம் கிளற கூடாது.

  4. 4

    ஒரு பிளேட்டில் நெய் தடவி பட்டர் சீட் போட்டு கடாயில் இருந்து இதில் மாற்றி ஸ்ப்ரெட் செய்து கொள்ளவும்.

  5. 5

    நட்ஸ் தூவி விட்டு சிறிய கிண்ணத்தை வைத்து மெதுவாக அமுக்கி விடவும். அதன் பின் நன்றாக சூடு ஆற விடவும்.

  6. 6

    சூடு ஆறியதும் எந்த வடிவத்தில் வேண்டுமா வெட்டி எடுத்து பரிமாறலாம். சுவையான ஜாமுன் பர்ஃபி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mawiza
Mawiza @Mawiza
அன்று

Similar Recipes