🍠ஆலு குலோப் ஜாமுன்🍠

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.

🍠ஆலு குலோப் ஜாமுன்🍠

#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 3 உருளைக்கிழங்கு
  2. 1 கப் சீனி
  3. 3 ஸ்பூன் மைதா
  4. ஒரு ஸ்பூன் பால் பவுடர்
  5. ஒரு சிட்டிகை சமையல் சோடா
  6. அரை ஸ்பூன் கேசரி பவுடர்
  7. தேவையான அளவு தண்ணீர்
  8. 5 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் மூணு உருளைக்கிழங்கு எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து உருளைக்கிழங்கை போட்டு 6 விசில் வைத்து அடுப்பை அணைத்து இறக்கவும்.

  2. 2

    விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கை தோலுரித்து பிசைந்து கொண்டு அதோடு 3 ஸ்பூன் மைதா சேர்க்கவும்.

  3. 3

    ஒரு ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து ஒருகைப்பிடி சிட்டிகை சமையல் சோடா சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    குலோப் ஜாமுன் ஊறவைக்க ஜீரா தண்ணி தயார் செய்ய அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் சீனி போடவும் அதோடு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். 5 ஏலக்காயை பொடியாக்கி அதோடு சேர்க்கவும்.

  5. 5

    ஒரு ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து அரை கம்பிப் பதம் வந்தவுடன் கால் மூடி எலுமிச்சைச் சாறு ஊற்றி ஜீரா தண்ணியை இறக்கவும். பின் அந்த உருளைக் கிழங்கு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  6. 6

    பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிதமான சூட்டில் ஒன்றிரண்டாக பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.

  7. 7

    எடுத்த உருண்டைகளை சீனி பாகில் போடவும். ஒரு அரை மணி நேரம் கழித்து ஒரு பவுலில் பரிமாறவும். சுவையான உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன் ரெடி.🌷🌷🌷

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes