சேப்பங்கிழங்கு மோர்குழம்பு

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#kilangu
சேப்பங்கிழங்கு மோர்குழம்பிற்கு மிகமிக பொருத்தமானது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.இதில் கால்ஷியம் சத்து உள்ளதால்,இதனை சமைத்து சாப்பிட்டால் எலும்புகளுக்கும்,பற்களுக்கும் கூடுதல் வலுவை கொடுக்கும். இதன்,தண்டை புளி சேர்த்து, புளி குழம்பு செய்து சாப்பிடலாம்.இலையில் டோக்ளா செய்து சாப்பிடலாம்.செய்வது மிகமிக சுலபம். சேப்பங்கிழங்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 1/4கப்வேக வைத்த சேப்பங் கிழங்கு
  2. 1டேபிள்ஸ்பூன்தனியா
  3. 2ஸ்பூன்து.பருப்பு
  4. 2சி.மிளகாய்
  5. 1ஸ்பூன்பச்சரிசி
  6. 1டீஸ்பூன்சீரகம்
  7. 1துண்டுஇஞ்சி
  8. 1டேபிள்ஸ்பூன்தேங்காய் துண்டுகள்
  9. 1டீஸ்பூன்ம.தூள்
  10. தேவையான அளவுகல் உப்பு ருசிக்கு
  11. 1கறிவேப்பிலை ஆர்க்கு
  12. 1டீஸ்பூன்கடுகு
  13. 2டேபிள்ஸ்பூன்தே.எண்ணெய்
  14. 1 கப்புளித்த திக்கான மோர்
  15. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    சேப்பங்கிழங்கை துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் தண்ணீர்,ம.தூள்,உப்பு போட்டு குக்கரில் வைக்காமல் நேரடியாக போடவும்.

  2. 2

    பிறகு மூடி போட்டு வேக விடவும். தனியா,து.பருப்பு,பச்சரிசி,ப.மிளகாய்,இஞ்சி, தேங்காய்,சீரகம் ஆகியவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.

  3. 3

    பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு பின் மைய அரைக்கவும்.அரைத்ததை மோரில் போடவும்

  4. 4

    மோரில் சிறிது உப்பு போட்டு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.கடாயில் தே.எண்ணெய் காய்ந்ததும், கடுகு,து.பருப்பு, மிளகாய் தாளித்ததும்,தோலுரித்த சேப்பங்கிழஙகில் ம.தூள்,உப்பு, கறிவேப்பிலை போடவும்.

  5. 5

    சிறிது வெந்ததும்,மோரில் கரைத்து வைத்ததை ஊற்றவும்.ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

  6. 6

    மேலே சிறிது தே.எண்ணெய் விடவும். மிகவும் ருசியான,*சேப்பங்கிழங்கு மோர் குழம்பு*,தயார். செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes