ஹோட்டல் ஸ்டையில் வெண் பொங்கல் / pongal receip in tamil

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#milk
சாதாரணமாக வெண்பொங்கல் என்றால்,மிளகை முழுதாகவும்,அதனுடன் சீரகத்தை நெய்யில் பொரித்தும் போடுவார்கள்.ஆனால் நான் செய்திருக்கும் இந்த பொங்கலுக்கு நெய்யே தேவையில்லை. வாசனைக்கு தேவையென்றால் ஒரு ஸ்பூன் விடலாம். அவரவர் விருப்பம்.எண்ணெயே போதும்.பால் சேர்க்க வேண்டும். மிளகு,சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தை,மிக்ஸியில் பொடித்து,எண்ணெயில் பொரித்து பொங்கலில் போடுவதுதான் இந்த பொங்கலின் ஸ்பெஷல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
4பேர்
  1. 2 கப்வெண் புழுங்கலரிசி
  2. 1/2கப்பயத்தம் பருப்பு
  3. 1கப்காய்ச்சி ஆறின பால்
  4. 1ஸ்பூன்சீரகம்
  5. 1பெரிய துண்டுஇஞ்சி
  6. 1ஸ்பூன்மிளகு
  7. 1டீஸ்பூன்பெருங்காயம்
  8. 10முந்திரி
  9. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  10. 2டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  11. தேவையான அளவுபொடி உப்பு ருசிக்கு
  12. 5 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    அரிசியையும்,ப.பருப்பையும் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் சிறிது ஊறவைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில், மிளகு,சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தை போடவும்.அதனை சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.

  3. 3

    குக்கரை மூடி போட்டு மூடவும்.2விசில் வைத்து‌,குழைய வேகவிடவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,பொடித்த பொடி,முந்திரி,கறிவேப்பிலையை வறுக்கவும்.

  4. 4

    ஸ்டீம் போனதும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் உப்பு போடவும்.சிறிது பெருங்காயத்தூள் போடவும்.பாலை ஊற்றவும்.

  5. 5

    வறுத்ததை போடவும்.ஒன்று சேர அனைத்தையும், கிளறவும்.இப்போது சுடசுட பால் வாசனையுடன்,*ஹோட்டல் ஸ்டைலில் வெண் பொங்கல்*,தயார். இதற்கு தேங்காய் சட்னி மிகமிக நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes