எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஆரஞ்சு வர்ணம்
  2. 4 -6கோழி கால்
  3. இஞ்சி பூண்டு
  4. 4 - 5பச்சைமிளகாய்
  5. 3 - 4 ஸ்பூன்தேங்காய்
  6. 4வெங்காயம்
  7. 3தக்காளி
  8. பச்சை வர்ணம் புதினா சாதம்
  9. 1/2 கட்டு புதினா மல்லி தழை ஒரு கைப்பிடி
  10. 3-4பச்சை மிளகாய்
  11. இஞ்சி பூண்டு
  12. 2 கப்பாஸ்மதி அரிசி
  13. 2 ஸ்பூன்தேங்காய் துருவல்
  14. வெள்ளை வர்ணம்
  15. 1 கப்அரிசி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஆரஞ்சு வர்ணம்..... வாணலில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலம் பிரியாணி இலை போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் 3 போட்டு வதக்கி தக்காளி போட்டு வதக்கவும்

  2. 2

    பின்னர் கோழி காலை போட்டு வதக்கவும்....அதில் மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லித்தூள் 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கிளறி தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

  3. 3

    பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மிளகு சீரகம் பெருஞ்சீரகம் போட்டு வதக்கவும். சுருள வந்ததும் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்

  4. 4

    இதில் வடித்த சோறு போட்டு கிளறவும்

  5. 5

    பச்சை வர்ணம்......குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் தாளித்து பெரிய வெங்காயம் 1 நீளவாக்கில் வெட்டி வதக்கவும்....பச்சை பட்டாணி சிறிது போட்டு வதக்கவும்

  6. 6

    இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் புதினா கொத்தமல்லி தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து அரைத்த விழுது போட்டு வதக்கி அரிசிக்கு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்

  7. 7

    தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்க்கவும்.....தண்ணீர் சிறிது வற்றியதும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி குக்கரை மூடி வெயிட் போட்டு 15 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணவும்....

  8. 8

    வெள்ளை நிறம்..... அரிசி ஊற வைத்து வடிக்கவும்

  9. 9

    நீல வர்ணத்திற்கு நீல வர்ண பெர்ரி பழங்களை வைத்தேன்......வந்தே மாதரம் 💪💪💪💪ஜெய்ஹிந்த்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes