பீட்ரூட் கோதுமை பர்கர் பன்

#nutrition இதில் பீட்ரூட், கோதுமையும் சேர்த்து உள்ளதால் மிகவும் சத்தானதும் கூட.. சுவையும் அருமையாக இருந்தது..
பீட்ரூட் கோதுமை பர்கர் பன்
#nutrition இதில் பீட்ரூட், கோதுமையும் சேர்த்து உள்ளதால் மிகவும் சத்தானதும் கூட.. சுவையும் அருமையாக இருந்தது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை பொடியாக நறுக்கி மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு கப் அளவு சாறு பிழிந்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் பீட்ரூட் சாறை ஊற்றி லேசாக சூடு செய்யவும்... அதைக் கிண்ணத்தில் மாற்றி அதில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்..
- 3
பத்து நிமிடத்தில் பீட்ரூட் சாறு பொங்கி இருக்கும்... அதை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும் அத்துடன் சிறிது உப்பையும் சேர்த்து கலந்து விடவும்... கையில் ஒட்டுவது போல தான் இருக்கும் அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து விடவும்
- 4
மாவு நன்றாக பிசைந்து முடித்ததும் சிறிது வெண்ணெய் மேலே தடவி மூடி வைக்கவும்... மாவு இரண்டு மடங்காக பொங்கி வரும் வரை மூடி வைக்கவும்...
பொங்கி வந்ததும் மீண்டும் அதை நன்றாக பிசைந்து கொள்ளவும் - 5
ஒரு ட்ரேயில் வெண்ணெய் தடவி அதில் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மூடி 30 நிமிடங்கள் வைக்கவும்.. உருண்டை இரண்டு மடங்காக இருக்கும்...
- 6
உருண்டையின் மீது லேசாக பால் தடவவும்... விருப்பப்பட்டால் அதன்மீது வெள்ளை எள்ளை தூவவும்.. பிரிஹீட் செய்த ஓவனில் 170° செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்..
- 7
30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து சூட்டோடு அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவவும்... ஆறும்வரை ஈரத்துணியால் மூடி வைக்கவும்... இரண்டு பன்னை மட்டும் நான் பெரிதாக பர்கர் பன் போல் செய்துள்ளேன்...
- 8
பன்னை இரண்டாக கட் பண்ணி வெங்காயம் தக்காளி நம் விருப்பப்படி எது வேண்டுமானாலும் வைத்து பர்கர் போல் பரிமாறலாம்... குழந்தைகளுக்கும் தைரியமாக கொடுக்கலாம் இது கோதுமை மாவுடன் பீட்ரூட் கலந்து செய்ததால் சத்தானதாகவும் இருக்கும்... இப்போது சுவையான சத்தான பீட்ரூட் கோதுமை பர்கர் பன் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது. Natchiyar Sivasailam -
-
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana -
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
#coconut #GA4 இதே போல் ஏற்கனவே ஒரு மஸ்கோத் அல்வா செய்துள்ளேன்.. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. சுவையும் சத்தும் அதிகம்.. Muniswari G -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
கோதுமை வெஜிடபிள் சப்பாத்தி
கேரட் கண்ணுக்கு நல்லது பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். இந்த வெஜிடபிள் சப்பாத்தி முதல் ஆளாக சமைத்து பாருங்கள் Sahana D -
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
-
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
#asma#npd1இதில் வெறும் கோதுமை மற்றும் இல்லாமல் பீட்ரூட்டும் கலந்து இருப்பதால் நமக்கு பீட்ரூடின் சத்தும் கிடைக்கிறது எனக்கு இது மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala
More Recipes
கமெண்ட் (6)