நெய் மீன் குழம்பு(nei meen kulambu recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

என் மகனுக்காக...

நெய் மீன் குழம்பு(nei meen kulambu recipe in tamil)

என் மகனுக்காக...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 5 ஸ்பூன் எண்ணெய்
  2. 150 கி நறுக்கிய சிறிய வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. 1 கி நெய் மீன்
  5. 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது புளி எலுமிச்சை அளவு
  6. 1 ஸ்பூன் மிளகு
  7. அரை மூடி அளவு தேங்காய் விழுது
  8. 3 ஸ்பூன் மிளகாய் தூள்,
  9. 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்,
  10. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 2 ஸ்பூன் கரம் மசாலா
  12. சிறிதளவுசோம்பு, பட்டை, கிராம்பு
  13. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மீன் துண்டுகளை சுத்தம் செய்து மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    மண் சட்டியில் எண்ணெய் மற்றும் சோம்பு பட்டை கிராம்பு மற்றும் மிளகு தாளிக்கவும்.

  3. 3

    நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி போடவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் காத்திருக்கவும்

  4. 4

    அதனுடன் கறிவேப்பிலை மற்றும் புளி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்

  5. 5

    பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்

  6. 6

    கொதிக்கும் புளி நீரில் வெங்காய தக்காளி விழுது சேர்க்கவும்

  7. 7

    முழுமையாக கொதித்த பிறகு, அதில் மீன் துண்டுகளை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  8. 8

    கடைசியாக தேங்காய் விழுது சேர்த்து கொத்தமல்லி இலை சேர்க்கவும்

  9. 9

    சுவையான மீன் குழம்பு கிடைக்கும்

  10. 10

    பரிமாறவும் சுவைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes