மிட்டா சால்னா மீன் குழம்பு #nv(Salna meen kulambu recipe in tamil)

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

#nvஇந்த மிட்டா சால்னா எங்க மாமியார் சொல்லி குடுத்தாங்க ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும். அடிக்கடி வைப்பேன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

மிட்டா சால்னா மீன் குழம்பு #nv(Salna meen kulambu recipe in tamil)

#nvஇந்த மிட்டா சால்னா எங்க மாமியார் சொல்லி குடுத்தாங்க ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும். அடிக்கடி வைப்பேன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 300 கிராம்மீன்
  2. 11/2 டம்ளர் தண்ணீர்
  3. 1 வெங்காயம்
  4. 2 சின்ன தக்காளி
  5. 3/4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 3பச்சை மிளகாய்
  7. புதினா கொத்தமல்லி கொஞ்சம்
  8. 11/2 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  9. 1 /2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  10. 1/2 டேபிள் ஸ்பூன்சீரகத்தூள்
  11. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகு தூள்
  12. 1 /3 டீஸ்பூன்மிளகாய் தூள்
  13. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  14. 2பட்டை 2கிராம்பு 2ஏலக்காய்
  15. 1 டேபிள் ஸ்பூன்உப்பு
  16. பாதிஎலுமிச்சைபழம்
  17. 1 கப்தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் மசாலா போட்டு மீன் 5 நிமிடம் ஊற வைக்கவும். மீன் மசாலா உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள்.

  2. 2

    ஊற வைத்த மீனை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் அரை பதமாக பொரிக்கனும். பொரித்த பிறகு அதே கடாயில் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பிறகு புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் வதக்கி ய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பிறகு மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    வதக்கிய பிறகு 11/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு 3 நிமிடம் கொதிக்கா விடனும்

  6. 6

    கொதித்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து பொரித்து வைத்துள்ள மீனை அதில் சேர்க்கவும். ஒரு 5 நிமிடம் அதில் இருக்கட்டும் குறைவான தீயில்

  7. 7

    வைத்து இருக்கின்ற தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஒரு பாதி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கிளறவும்.

  8. 8

    சுவையான மிட்டா மீன் குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes