ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#npd2
கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏
பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 நபர்
  1. 5ஆரஞ்ச் பிஸ்கட் பாக்கெட்
  2. ¼ லிட்டர் பால்
  3. 1 பட்டர் சீட்
  4. 100 கிராம் உப்பு
  5. 1 தேக்கரண்டி எண்ணெய் (அல்லது) 1 தேக்கரண்டி நெய்
  6. ½ தேக்கரண்டி சோடா மாவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஆரஞ்ச் பிஸ்கட் தனியாகவும்,க்ரீம் தனியாகவும் பிரித்துக் கொள்ளவும். பிறகு பிஸ்கட்டை மற்றும் அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் தேவையான அளவு பால், ஆப்ப சோடா சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு கட்டி சேராமல் கரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு சில்வர் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு,அதில் செய்து வைத்த கலவையை ஊற்றவும்.பின்பு ஒரு குக்கரில் 100 கிராம் கல் உப்பு அல்லது தூள் உப்பு சேர்த்து மேலே ஒரு பிடிமானம் வைத்து கலந்து வைத்த கலவையை குக்கரில் வைக்கவும்...

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் பிரித்து வைத்திருந்த க்ரீமை எடுத்து சிறிது தண்ணீர் அல்லது பால் ஊற்றி அடுப்பில் வைத்து உருகும் வரை கலக்கவும். இப்பொழுது க்ரீம் தயாராகிவிட்டது.

  5. 5

    சரியாக 35 நிமிடம் கழித்து கேக் வெந்து விட்டதா என்று,ஒரு கரண்டியின் பின்புறத்தில் குத்தி சரிபார்க்கவும்..

  6. 6

    பின்பு அந்த கேக்கை எடுத்து பட்டர் சீட்டை எடுத்துவிட்டு அதில் செய்துவைத்த கிரீமை ஊற்றி இறக்கினால் சுவையான ஆரஞ்சு கேக் ரெடி 🍊🔥

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes