ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#everyday4
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 2 பாக்கெட்120 கிராம் ஓரியோ பிஸ்கட்
  2. 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  3. 1 கப் பால்
  4. 100 கிராம் டார்க் காம்பவுண்ட் சாக்லேட்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஓரியோ பிஸ்கெட்டை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இதில் பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    இதில் சிறிது சிறிதாக பாலை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து விடவும். சூடு தாங்க கூடிய கப்பு அல்லது கிண்ணங்களை எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் சிறிது மைதா மாவு தூவி அதிகமான மாவை தட்டி விடவும். இதில் பாதியளவு கேக் மாவை ஊற்றிக் கொள்ளவும். அதற்குமேல் ஒரு பெரிய துண்டு சாக்லேட்டை வெட்டி வைக்கவும். சாக்லேட் மூடும்படி கேக் மாவை அதன் மேல் சிறிது ஊற்றவும்.

  3. 3

    ஒரு குக்கரில் மணல் சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் பிரிஹீட் செய்யவும். பிறகு இதன் மேல் ஒரு தட்டு வைத்து தயாரித்துள்ள கேக் கிண்ணங்களை வைக்கவும்.

  4. 4

    மூடி போட்டு விசில் போடாமல் மிதமான தீயில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும். திறந்த பின் டூத் பிக் வைத்து குத்தி பார்க்கவும். மாவு ஒட்டாமல் வந்தால் சரியாக பேக் ஆனது என்று அர்த்தம். கிண்ணங்களை வெளியே எடுத்து ஓரங்களை கத்தியால் கீறி விடவும்.

  5. 5

    இதனை ஒரு தட்டில் கவிழ்த்து அதன் மேல் பொடித்த சர்க்கரையைத் தூவி பரிமாறவும். வெட்டி எடுக்கும் பொழுது நடுவில் சாக்லெட் குழம்பு நிற்கும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes