ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

@homecookie_270790
எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.

மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2மணி நேரஇலக்கம்
4பேர்
  1. 1முழு ஆரஞ்சு பழச்சாறு
  2. 2முட்டை அல்லது 1/2கப் ஹுங்(கட்டி) தயிர்
  3. 1கப் மைதா மாவு
  4. 1/2கப் வெள்ளை சர்க்கரை,அளவான இனிப்பிற்கு
  5. அல்லது
  6. 3/4-1 கப் வெள்ளை சக்கரை, தித்திப்பான இனிப்பிற்கு
  7. 1/4கப் ஆயில்
  8. 1/2-1ஸ்பூன் ஆரஞ்சு தோல்,துருவியது
  9. 1ஸ்பூன்1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  10. 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

2மணி நேரஇலக்கம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம்.

    ஆரஞ்சு பழத்தை நன்றாக கழுவி 1ஸ்பூன் அளவிற்கு,அதன் தோல் சீவி எடுக்கவும்.மேலும் பழச்சாறு எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    முதலில்,மிக்ஸி ஜாரில் முட்டை அல்லது தயிர் சர்க்கரை,எண்ணெய், பழச்சாறு,துருவிய தோல் சேர்த்து நன்றாக மென்மையாக வரும் அளவிற்கு,விட்டு விட்டு 30 நொடிகளுக்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இந்தக் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி,இதனுடன் மைதா மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா மூன்றையும் சலித்து சேர்க்கவும்.

  4. 4

    அனைத்தையும் நன்றாக கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.கடைசியாக, ஆரஞ்சு கலர் ஜெல் 2 சொட்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    இனி,கேக் மோல்டு நடுவில் மற்றும் ஓரங்களில் எண்ணெய் தடவி,பட்டர் பேப்பர் அதன் வடிவத்திற்கு வெட்டி வைக்கவும்.பின் மாவை ஊற்றவும்.

  6. 6

    அடி கனமான கடாய் அல்லது குக்கரில் மண் அல்லது உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து,மீடியம் தீயில் வைத்து காற்று வெளியே போகாதவாறு மூடி 10 நிமிடங்கள் சூடு செய்யவும்.பின் ஸ்டாண்ட்-ல் கேக் மோல்டு வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.

    இப்பொழுது காற்று போகுமாறு,

    குக்கரில் செய்தால், விசில் போடாமல் மூடி வைக்க வேண்டும்.

    கடாயில் செய்தால், அதன் மூடியில் சிறிய காற்றுபோக்கி இருக்க வேண்டும்.

  7. 7

    குறைந்தது 45 முதல் அதிகமாக 60 நிமிடங்களில் கேக் வெந்து விடும்.

  8. 8

    ஒரு முள் கரண்டியால் குத்தி பார்த்தால்,மாவு ஒட்டவில்லை எனில் நன்றாக வெந்து விட்டது.

  9. 9

    ஆறியதும், மோல்டின் ஓரங்களில் கத்தியால் எடுத்து விட்டு கேக்கை வேறொரு தட்டிற்கு மாற்றவும்.

  10. 10

    மிகவும் சாப்ட் ஆன, சுவையான ஆரஞ்சு கேக் ரெடி.

    அளவான இனிப்பாக இருந்ததால்,குழந்தைகளும்,பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஏதுவாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes