எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 மணி
5 பேர்
  1. 2கப் பச்சைபயிறு
  2. 2கப் அச்சு வெல்லம் அல்லது கருப்பட்டி
  3. 1கப் தேங்காய் துருவல்
  4. 5ஏலக்காய்
  5. 1கப் அரிசிமாவு
  6. 1 ஸ்பூன்மைதா மாவு
  7. 1ஸ்பூன் எள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1ஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் (விருப்பப்பட்டால் சேர்க்க)
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

1.30 மணி
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெறும் வாணலியில், பச்சை பயிறு சேர்த்து சிறு தீயில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். சிவந்ததும்,ஏலக்காயை சேர்த்து கிளறி வேறு தட்டிற்கு மாற்றவும்.

  3. 3

    பின் வெறும் வாணலியில் தேங்காய் துருவல் சேர்த்து,சிவக்க வறுக்கவும். இறக்கும்போது எள் சேர்த்து கிளறவும்.அல்லது எள்ளை தனியாக வறுத்து வைக்கவும்.

    தேங்காய் நன்றாக வறுப்பட்டால் தான் வெகு நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம்.

  4. 4

    வறுத்த பயிறை நன்றாக ஆற வைத்து,மிக்ஸியில் சேர்த்து 95%மையாக இருக்கும்படி அரைக்கவும்.சிறிதளவு கொரகொரப்பாக இருக்க வேண்டும்.

  5. 5

    ஒருபாத்திரத்தில் வெல்லம்,அதனுடன் 1/2கப் தண்ணீர் சேர்த்து,சிறுதீயில் வைத்து கரைக்கவும்.சிறு கம்பி பதம்(1கம்பி பதம் தேவை இல்லை) வந்ததும் அரைத்த மாவுடன், வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து, அதில் இந்த பாகுவை சூடோடு, வடிகட்டிச் சேர்க்கவும்.

    விருப்பப்பட்டால் இந்த கலவையுடன்,1ஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்.

  6. 6

    கரண்டியினால் கலந்து விட்டு,சூடு ஆறும் முன், கைகளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

    பாகு ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது.சிறிதளவு சுடு தண்ணீர் தெளித்து பிடிக்கவும்.

  7. 7

    இந்த உருண்டைகளை 30 40 நிமிடங்களுக்கு, அப்படியே வைக்கவும்.

  8. 8

    ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு,மைதா மாவு,உப்பு,மஞ்சள் தூள் கலந்து தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

  9. 9

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும் 2 அல்லது 3 உருண்டைகளாக சேர்த்து மாவில் முக்கி எண்ணெய்யில் சேர்க்க வேண்டும்.

  10. 10

    நன்றாக பொரிந்ததும் மாற்றி போட்டு பொரித்து எடுக்கவும்.

  11. 11

    அவ்வளவுதான். சுவையான முந்திரி கொத்து ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes