ரவை தேங்காய் அல்வா(rava coconut halwa recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

ரவை தேங்காய் அல்வா(rava coconut halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 1 கப் துருவிய தேங்காய் துருவல்
  3. 1 கப் பொடித்த வெல்லம்
  4. 5-6 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 2-1/4 கப் தண்ணீர்
  6. சிறிதுமுந்திரி திராட்சை
  7. சிறிதுஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ரவையை 1 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறிய ரவையுடன் தேங்காய் துருவல் வெல்லம் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    இத்துடன் சிறிது ஏலக்காய்த்தூள் 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இது பார்ப்பதற்கு நீர் போல் இருக்க வேண்டும்

  4. 4

    முதலில் கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும் பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை குறைந்த தீயில் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்

  5. 5

    கெட்டியாகி வரும் பொழுது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை நெய் விட்டு கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்

  6. 6

    15 நிமிடம் கழித்து தொட்டுப் பார்க்கவும் கையில் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும் இப்போது சிறு பகுதி எடுத்து உருண்டையாக உருட்டவும் இப்போது கையில் ஒட்டாமல் உருண்டு வந்தால் அல்வா தயார்

  7. 7

    சுவையான ரவை தேங்காய் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes