வேர்க்கடலை மக்ரோன்ஸ் (peanut Macaroons recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cf1 முந்திரி பாதாம்பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வைத்து செய்துள்ளேன்.. சுவை அருமையாக இருந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 30 நிமி
4 நபர்கள்
  1. 2முட்டை வெள்ளைக்கரு
  2. 1/2கப் சர்க்கரை
  3. 1/2கப் வறுக்காத வேர்க்கடலை

சமையல் குறிப்புகள்

1 மணி 30 நிமி
  1. 1

    முதலில் ஒரு கடாயில் வேர்க்கடலையை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்... நிறம் மாறக் கூடாது... ஆறியதும் தோல் நீக்கி மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்..

  2. 2

    ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக பீட் செய்து கொள்ளவும்... அரை கப் சர்க்கரையை நன்றாக பொடி செய்து கொள்ளவும்.. முட்டையைப் பீட் செய்யும்போது அவ்வப்போது சர்க்கரையை ஒவ்வொரு ஸ்பூன் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்.

  3. 3

    இறுதியாக ஸ்டிப் பீக் வந்ததும் பீட் செய்வதை நிறுத்தி விடவும்.. அத்துடன் பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து மெதுவாக கிளறவும்..

  4. 4

    ஓவனை 100°சி 10 நிமிடங்கள் பிரிஹீட் பண்ணவும்.. கலந்து வைத்துள்ள கலவையை ஒரு கவரில் போட்டு டிரேயில் வட்டமாக பிழிந்து விடவும்... ஓவனில் வைத்து 100°சி 1மணி நேரம் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்...

  5. 5

    நான் சிறியதாக பிழிந்துள்ளேன் நீங்க விருப்பப்பட்டால் தூத்துக்குடி மக்ரூன் போல் பெரியதாகவும் பிழிந்து கொள்ளலாம்.. ஒன்றரை மணி நேரம் கழித்து ஓவனை அணைத்த உடன் உடனே வெளியே எடுக்க கூடாது... ஆறும் வரை உள்ளே இருக்க வேண்டும்... நன்றாக ஆறியவுடன் எடுத்தால் அருமையான வேர்கடலை மக்ரோன்ஸ் தயார்...

  6. 6

    இப்போது சுவையான சத்தான வேர்க்கடலை மக்ரோன்ஸ் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes