டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)

#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1கப் மைதா
  2. 4முட்டை
  3. 1/2கப் சர்க்கரை
  4. 1ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  5. 2டேபிள் ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி
  6. 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையின் மஞ்சள் கருவையும் வெள்ளைக் கருவையும் தனித்தனியாக பிரித்து வெள்ளைக் கருவை நன்றாக பீட் செய்து கொள்ளவும்... அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்..

  2. 2

    ஸ்டிப் பீக் வந்ததும் மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்யவும்.. அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து பீட் பண்ணவும்...

  3. 3

    எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அதனுடன் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து மெதுவாக கலந்து விடவும்

  4. 4

    டூட்டி ஃப்ரூட்டியில் ஒரு ஸ்பூன் மைதாவை கலந்து வைக்கவும்.. இது எதற்காக என்றால் கேக்கில் கலக்கும் போது அங்கங்கே தனித் தனியாக நிற்கும் இல்லையென்றால் எல்லாம் ஒன்றாக கலந்து விடும்... அதை கேக் கலவையில் சேர்த்துக் கலந்து விடவும்

  5. 5

    கேக் கலவையை கப்பில் ஊற்றி மேலே சிறிது டூட்டி ஃப்ரூட்டி தூவி விடவும்... பிரிகிட் செய்த அவனில் 180 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்

  6. 6

    வெந்துவிட்டதா என்பதை பார்க்க ஒரு சிறிய குச்சியை வைத்துக் குத்தி பார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதாக அர்த்தம்

  7. 7

    இப்போது சூப்பரான மிகவும் மிருதுவான கப் கேக் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes