எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ ஊதா நிற முட்டைக்கோஸ்
  2. 2 வெங்காயம்
  3. 2 பச்சைமிளகாய்
  4. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  5. 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. சிறிதுஎண்ணெய்
  7. 1 ஸ்பூன் கடுகு
  8. தேவையான அளவுஉப்பு
  9. வறுத்து பொடி செய்ய:
  10. 1 ஸ்பூன் சீரகம்
  11. 3 வரமிளகாய்
  12. 1 மூடி தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்

  2. 2

    வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் (தேங்காய் தவிர) வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு கூட தேங்காய் துருவல் சேர்த்து பொடி செய்து கொள்ளவும் காய் நன்றாக வெந்ததும் பொடித்த கலவையை சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறவும் சுவையான ஆரோக்கியமான கோஸ் பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes