எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 பரிமாறுவது
  1. 300 கிராம் மைதா மாவு
  2. 1 கப் பிரவுன் சக்கரை
  3. 3 முட்டை
  4. 2 ஆரஞ்சு ஜூஸ்
  5. 2 கப் பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ், பேரிச்சம்பழம், காய்ந்த திராட்சை, காய்ந்த கருப்பு திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி,டுட்டி ஃப்ரூட்டி
  6. 1/4 கப் கோகோ பவுடர்
  7. 1 ஸ்பூன் பட்டைத்தூள்
  8. 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  9. 1 ஸ்பூன் சுக்குப்பொடி
  10. 1 ஸ்பூன் பேக்கிங் சோடா
  11. 1/2 கப் எண்ணெய்
  12. 1 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் நறுக்கி வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இதை எட்டு மணிநேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    அடுத்தது பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பட்டைத்தூள், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, பேக்கிங் சோடா, ஆகியவற்றை சலிக்கவும். மற்றோரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து பீட் செய்யவும்.

  3. 3

    பின்பு வெண்ணிலா எசென்ஸ், பிரவுன் சக்கரை,எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்யவும். இதில் மாவு கலவையை கலந்து கொள்ளவும்.

  4. 4

    பின் ஊற வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் மட்டும் எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும். ஆரஞ்சு சாறு கடைசியில் தேவைப்பட்டால் கேக்கில் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    கேக் டின்'னில் பட்டர் பேப்பர் செய்து, கேக் கலவையை ஊற்றவும். 15 நிமிடம் oven’னை 180°C அளவில் சூடாக்கவும். கேக் டின்'னை வைத்து, 45 மணி நேரம் 180°C அளவில் பேக் செய்யவும்.

  6. 6

    சுவையான சாக்லேட் பிளம் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes