பாம்பே பட்டாடா வடா (Bombay Batata wada recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பூண்டு, இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள்,அம்சூர் பவுடர் எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
மல்லி இலையை பொடியாக நறுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- 4
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சீரகம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மேலே கொடுத்துள்ள மசாலாக்களை சேர்த்து வதக்கி, வேக வைத்து வைத்துள்ள உருளைக் கிழங்கை மசித்து சேர்த்து, உப்பு, எலுமிச்சை சாறு கலந்து, மல்லி இலை தூவி இறக்கவும்.
- 5
மசாலா சூடு ஆறியவுடன் விருப்பம் போல் உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
- 6
பட்டாடா வாடா செய்ய ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சமையல் சோடா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 7
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருளைக் கிழங்கு உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து ஒரு டிஸ்ஸு பேப்பரில் வைக்கவும். அப்போது எண்ணை வடிந்து விடும். இப்போது பாம்பே ஸ்டைல் பட்டாடா வாடா தயார்
- 8
தயாரான பட்டாடா வடைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து டொமேட்டோ கெச்சப் அல்லது சட்னி வைத்துக்கொண்டு சுவைக்கலாம்.
- 9
இது பாம்பே ரோட்டு சைடு ஸ்னாக்ஸ் மற்றும் குளிர் காலத்தில் சாப்பிட சிறந்த ஒரு மாலை நேர சிற்றுண்டி. செய்வது மிகவும் சுலபம். இந்த பட்டாடா வாடா பூண்டு, இஞ்சி மனத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
ஸ்டப்டு மிர்ச்சி வடா(stuffed mirchi vada)
#cf6இது ஒரு ராஜஸ்தானி ஸ்னாக்ஸ். மிகவும் மொரு மொரு என்று இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.மழைக்காலத்தின் அசத்தலான பார்ட்னர்... Nisa -
-
-
-
-
கடுபு (kadupu) (Kadupu recipe in tamil)
கடுபு என்பது கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. இது நம் தமிழக மக்களின் கொழுக்கட்டை மாதிரியானது. ஆனால் வறுத்த எள்ளுப் பொடி சேர்த்திருப்பதால் கொஞ்சம் வித்யாசமான சுவையில் இருக்கும்.#steam Renukabala -
-
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
கிரில்டு மசாலா எக் பஜ்ஜி (Grilled Masala Egg Bajji Recipe in Tamil)
#GRAND2#WEEK2முட்டையை அவித்து மசாலா தடவி க்ரில் செய்து பிறகு பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
தர்ப்பூசணித் தோல் காரக் கறி (Tharboosani thol kaarakari Recipe in Tamil)
இதில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளது. நார் சத்துமிக்கது. இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடம்பில் உப்புசேராமல் தடுத்து , சிறுநீரில் கல்லை கரைத்து வெளியேறச் செய்யும். #book #nutrient3 Renukabala -
-
-
-
-
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala
More Recipes
கமெண்ட் (11)