வண்டி கடை சுண்டல்(sundal recipe in tamil)

#wt2
எனக்கு மிகவும் சாட் ஐட்டம் பிடிக்கும்.இது எங்கள் செவ்வாய்பேட்டையில் சேட்டு வண்டியில் வைத்து கொதிக்க கொதிக்க தட்டில் ஊற்றி மேலே அலங்கரித்து கொடுப்பார். மிகவும் சுவையாக இருக்கும்.நானும் என் ஃப்ரென்ட்ஸ் இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றால் ஈவினிங் இதை சாப்பிட்டுவிட்டு வருவோம். இன்று வீட்டில் இதை செய்தேன் சேட்டு கடை வண்டி சுண்டல் போலவே இருந்தது. எங்கள் சேலம் செவ்வாய்பேட்டை நைட் டிபன் கடை நொறுக்குத்தீனி கடை, சாட் ஐட்டம்ஸ் கடை தட்டு வடை செட்டு கடை வைசியாள் பலகாரம், வெள்ளை சந்தவை,மாவிளக்கு மாவு,ஒப்பட்டு,கம்பங் கூல் முதலியவற்றிற்கு மிகவும் பிரபலமான area.தரமும் சுவையும் மாறாமல் கிடைக்கும். எதுவும் ரெடிமேடாக மிகவும் சுகாதாரமான முறையில் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப்பட்டாணி அல்லது வெள்ளை பட்டாணி ஏதாவது ஒன்றில் கால்கிலோ பட்டாணி கழுவி குறைந்தது பத்து மணி நேரம் ஊற வைக்கவும். மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.இரண்டாவது படத்தில் காட்டியுள்ளபடி வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி அனைத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.கொத்தமல்லி தழை தவிர்த்து தட்டில் உள்ள எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பச்சைப் பட்டாணியை அரை லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் சுண்டலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நான்கு அல்லது ஐந்து சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும். சுண்டலை வடித்து தண்ணீர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இப்போது அரைத்த விழுதை குக்கரில் எண்ணெய் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய வதக்கி கொள்ளவும். பிறகு அனைத்து தூள்களையும் சேர்த்து டெளுகு கொஞ்சமாக சேர்த்து பச்சை வாசம் போக சுருள வதக்கி கொள்ளவும்.
- 3
வடித்து வைத்த தண்ணீர் முழுவதையும் இந்த வதக்கிய விழுதில் சேர்த்து 10 நிமிடம் அதிக பிளேமில் நன்கு கொதிக்க விடவும். மிக்ஸி கழுவிய தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.பிறகு வேகவைத்த பட்டாணியை சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும். மூடி வைத்து செய்ய வேண்டாம் திறந்து வைத்து கொதிக்க விடவும்.
- 4
கடைசியாக கொஞ்சம் பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.தட்டில் கிரேவி மற்றும் பட்டாணி ஆக எடுத்து ஊற்றி மேலே வெங்காயம் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.கேரட் இருந்தால் துருவி தூவிக் கொள்ளலாம் பொடியாக நறுக்கிய தக்காளி கூட சேர்த்துக் கொள்ளலாம். மாலை நேரத்திற்கு அனைத்து வயதினருக்கும் ஏற்ற சாட் ஐட்டம் தயார்.இதில் எப்பொழுதும் போல் இஞ்சி பூண்டு தக்காளி வெங்காயம் பட்டாணி சேர்ப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இந்த குளிர்காலத்திற்கு சூடாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)


பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)


வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)


மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)


மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)


மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)


சன்னா மசாலா


சுண்டல்(sundal recipe in tamil)


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)


பீச் சுண்டல்


தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)


கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)


Salem special settukadai mix masala chat


தலைப்பு : பட்டாணி சுண்டல்(pattani sundal recipe in tamil)


*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)


நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)


வண்டி கடை பட்டாணி சுண்டல் மாசலா


சுண்டல்(sundal recipe in tamil)


ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)


கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)


சுண்டல் சாதம் (Sundal saatham recipe in tamil)


தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)


விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)


சுண்டல் (Healthy sundal recipe in tamil)


எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (Hotel style veg kurma Recipe in Tamil)


ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)


மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)


சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)

கமெண்ட் (4)