சுண்டல் (Healthy sundal recipe in tamil)

ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை.
சுண்டல் (Healthy sundal recipe in tamil)
ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெறும் வாணலில் பயிறுகள சூடேறும் வரை வருத்து, இரண்டு முறை கழுவி விட்டு தண்ணீரில் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். ஊற விட்டு வேக வைத்தால் எந்த சுண்டலும் மலர்ந்து வேகும்.சுவை அதிகமாக இருக்கும்.ஒரு மணி நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்த உடன் பயிறு வகைகளை தண்ணீர் வடித்து கொதித்த நீரில் சேர்க்கவும். மிதமான தீயில் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.குக்கரில் வேக வைக்கலாம் எத்தனை சவுண்டில் வேகம் என்று சரியாகத் தெரியாததால் பாத்திரத்தில் போட்டு வேக வைத்து தேன்.
- 2
பயறுகள் மலர்ந்து வெடித்து வெந்த பின்பு அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு தண்ணீர் வடித்து விடவும். தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது துருவிய தேங்காய் பெருங்காயத் தூள் வரமிளகாய் பச்சை மிளகாய் சீரகம் இவை அனைத்தையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை கொத்தமல்லியை மட்டும் கடைசியாக மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
- 4
அடி கனமான வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வேக வைத்த பயறை சேர்க்கவும் அதன் மேல் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.இவை அனைத்தையும் மிதமான தீயில் நன்கு சூடு ஏற பச்சைமிளகாய் வரமிளகாய் பச்சை வாசம் போகும் வரை பிரட்டி விடவும்.
- 5
சுவையான ஆரோக்கியமான புரதச் சத்து நிறைந்த பயறு வகைகள் சுண்டல் தயார். மாலை எங்கள் வீட்டில் கிருஷ்ணருக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இந்த சுண்டல் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. விஷ்ணு சகஸ்ரநாமம் நித்யா ஸ்லோகம் மற்றும் அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்பட்டது. ஹரே கிருஷ்ணா.
- 6
Tips.. எந்த பயறு வகைகளையும் லேசாக வாணலியில் வறுத்தால் வாய்வுக்கோளாறு பிடிக்காது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)
மிகவும் சத்தான பயறு வகை இந்த நரிப்பயறு. இதில் சுண்டல் செய்யலாம். பொரி விளங்கா உருண்டையில் இந்த நரி பயிறு நாங்கள் சேர்த்து செய்வோம். பொறிவிலங்கா உருண்டை மிகவும் சத்தான இனிப்பு உருண்டையாகும். குழந்தைகளுக்கு வெளியில் பேக்டு ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதில் இதுபோல சத்தான தானியங்கள் சேர்த்த உருண்டைகள் செய்து கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது. Meena Ramesh -
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh -
-
பச்சைபயிறு சுண்டல்(Green gram sprouts recipe in Tamil)
*பாசிப் பயிறில் வைட்டமின் பி9 அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் பி5, பி6, பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன.* எனவே குர்ரோனை போல அசாதாரணமான சூழ்நிலையில் நாம் முளை விட்ட பச்சை பயிறை சுண்டலாக செய்து சாப்பிட்டோம் என்றால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுசேர்க்கும் ஆற்றல் கொண்டது.#Ilovecooking... kavi murali -
தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#poojaநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை. Meena Ramesh -
பாசிப்பருப்பு சுண்டல் (Paasiparuppu sundal recipe in tamil)
#pooja பாசிப் பருப்பை குழையாமல் வேக வைத்து உதிரியாக சுண்டல் தாளித்து , சிறிது லெமன் பிழிந்து கேரட் துருவி விருப்பத்திற்கு ஏற்றார்போல் சலட் ஆகவும் சாப்பிடலாம் . அல்லது இதுபோல் சுண்டலும் சாப்பிடலாம் BhuviKannan @ BK Vlogs -
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)
#SAநவராத்திரி என்றால் சுண்டல் தான் நம் நினைவிற்கு வரும். இந்த சுண்டல் கர்நாடகா கோவிலில் மிகவும் பிரபலமானது. சுவை அதிகம். Jegadhambal N -
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று.. Muniswari G -
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
-
கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook Udayabanu Arumugam -
-
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
#pooja.. தட்டாம்பயர் சுண்டல் ரொம்ப ருசியானது. பூஜைக்கு இதுவும் செய்வார்கள்... Nalini Shankar -
பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
#VKஇது எங்க பாட்டி காலத்து சுண்டல் கிராமத்து முறையில செய்தது மசாலா தூள் எல்லாம் இல்லை விதவிதமா காய்கறி எல்லாம் இல்லை வேலை முடிந்து வந்தா ஒரு தட்டு நிறைய அள்ளி கொடுப்பாங்க வெறும் உப்பு சேர்த்து வேகவைத்து தாளிப்பு மட்டும் தருவாங்க அதுல வெங்காயம் கூட இருக்காது ஆனா அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
கருப்பு உளுத்தம்பருப்பு சட்னி
கருப்பு உளுந்து உடலுக்கு மிகுந்த ஊட்டமும் வலிமையும் சேர்க்கிறது இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு வலு சேர்க்கிறது. Sree Devi Govindarajan -
-
நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)
#ed3 # இஞ்சிஅரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்