வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#steam

சென்னை பீச் என்றாலே நினைவுக்கு வரும் வண்டி கடை சுண்டல் இப்போது நமது வீட்டிலும் செய்து ருசிக்கலாம்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 200 கிராம்காய்ந்த பச்சை பட்டாணி
  2. 1வெங்காயம் 4-5 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 1/2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 1/4 டீஸ்பூன்கரம் மசாலா
  7. 1/4 டீஸ்பூன்சில்லி பவுடர்
  8. இஞ்சி சிறிது
  9. 4பூண்டு பல்
  10. 1தக்காளி நறுக்கியது
  11. எண்ணெய்
  12. பெருங்காயம்
  13. 1வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  14. 1 கொத்துகறிவேப்பிலை
  15. கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்ந்த பச்சை பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைத்து பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மஞ்சள் தூள் அரைடீஸ்பூன் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  2. 2

    நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவற்றுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    கருவேப்பிலையும் சேர்த்து சிறிது வதக்கவும்.

  5. 5

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

  6. 6

    இந்நிலையில் வேகவைத்த பட்டாணியின் வடித்த நீரை சேர்க்கவும்.

  7. 7

    நன்றாக கொதி நிலை அடைந்தவுடன் வேகவைத்த பட்டாணியையும் அதில் சேர்த்துக் கொள்ளவும்.

  8. 8

    இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும்.

  9. 9

    அடுப்பை அணைத்து பின் சுண்டல் கிரேவி வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

  10. 10

    இப்போது சுவையான வண்டி கடை சுண்டல் மசாலா தயார்.

  11. 11

    பரிமாறும்போது சுண்டல் மசாலா மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பின் அதில் கொஞ்சம் கொத்தமல்லித்தழையை சேர்க்க சுவை கூடுதலாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes