மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
4 பரிமாறுவது
  1. அரை கிலோமட்டன்
  2. 3பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 3பச்சை மிளகாய்
  5. 2 டம்ளர்சீரக சம்பா அரிசி (1 டம்பளர் = 200ml)
  6. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. அரை ஸ்பூன்மிளகாய் தூள்
  8. அரை ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 4 ஸ்பூன்நெய்
  11. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. சிறிதளவு பிரியாணி இலை
  13. 1பட்டை-
  14. 2 கிராம்பு
  15. 1 ஏலக்காய்
  16. 1அன்னாசி மொக்கு
  17. ஒரு ஸ்பூன்எலுமிச்சம் பழம் சாறு
  18. சிறிதளவுபுதினா இலை
  19. ஒரு ஸ்பூன்சோம்பு
  20. அரைப்பதற்கு
  21. 10சின்ன வெங்காயம்
  22. 1தக்காளி பெரியது
  23. 2பச்சைமிளகாய்
  24. ஒரு கைப்பிடிபுதினா
  25. சிறிதளவுமல்லி இலை
  26. சிறிய துண்டுபட்டை
  27. 2 கிராம்பு
  28. ஒரு ஸ்பூன் சோம்பு
  29. ஒன்று ஏலக்காய்
  30. ஒன்றுஅன்னாசிப்பூ

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் கடலெண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானவுடன் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும் பின்பு சோம்பு சேர்த்துக் கொள்ளவும். மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் என்னை பிரிந்து வந்த உடன் மட்டனை சேர்த்து சிறிது நேரம் வதக்கி மட்டன் வேகும் அளவிற்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில் விடவும்

  5. 5

    விசில் அடங்கியவுடன் ஒரு டம்ளருக்கு 2 டம்ளர் என்ற வீதம் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (ஏற்கனவே மட்டன் விசில் விட ஊற்றிய தண்ணீரையும் கணக்கில் வைத்துக் கொள்ளவும்)

  6. 6

    நன்றாக கொதித்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான தீயில் முக்கால் பதம் அரிசி வேகும் வரை மூடி வைக்கவும். அடிப்பிடிக்காமல் அவ்வப்பொழுது கிளறி விடவும்

  7. 7

    அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் எலுமிச்சம் பழம் சாறு நெய் சிறிது, புதினா இலை சேர்த்து நன்கு கிளறி மூடி சிம்மில் ஒரு விசில் விடவும்

  8. 8

    மட்டன் பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes