நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/4 கிலோ நெஞ்செலும்பு
  2. 15சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 2தக்காளி அரைத்து விழுதாக்கிக்கணும்
  4. 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  5. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1 தேக்கரண்டி மிளகு தூள்
  8. 1/2 தேக்கரண்டி சீரக தூள்
  9. 1/4 தேக்கரண்டி கரம்மசால தூள்
  10. கொஞ்சம்கொத்தமல்லி தழை
  11. தேவைக்கேற்ப உப்பு
  12. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நெஞ்செலும்புல இருந்து உப்பு வரைக்கும் எல்லாத்தையும் குக்கர்ல போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, மேலாப்ல மல்லித்தழை போட்டு கிளறி மூடி வச்சு 7 விசில் விட்டு இறக்கவும்..

  2. 2

    கிளறி, தேவைப்பட்டா உப்பும், மிளகுத்தூளும் போட்டு பறிமாறலாம்...

    ஆனந்தமா சாப்பிடுங்க..
    ஆரோக்கியமா இருங்க...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

Similar Recipes