வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை கிலோவெண்டைக்காய்
  2. 150 கிராம்சின்ன வெங்காயம்
  3. 2தக்காளி-
  4. நெல்லிக்காய் அளவுபுளி
  5. 100 கிராம்மாங்காய்
  6. அரை ஸ்பூன்மஞ்சள் பொடி
  7. ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  8. அரை டீஸ்பூன்கொத்தமல்லித்தூள்
  9. தேவையானதாளிப்பதற்கு நல்லெண்ணெய்
  10. கடுகு உளுத்தம் பருப்பு
  11. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெண்டைக்காயை சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளி சின்ன வெங்காயம் இரண்டையும் சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்,

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், அதனுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்,வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்,

  3. 3

    வெண்டைக்காயை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு மாங்காவை சேர்த்துக் கொள்ளவும், எல்லாம் நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் எல்லாம் கலந்து வதக்கவும், பிறகு புளியை கரைத்து தண்ணியை அதில் ஊற்றவும், இக்கலவையை நன்கு கொதிக்க விடவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும் சுவையான வெண்டைக்காய் பச்சடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban
அன்று

Similar Recipes