மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு

மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)

இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் மக்காச்சோள ரவை
  2. 200 கிராம் சின்ன வெங்காயம்
  3. 6 பச்சை மிளகாய்
  4. 2 தக்காளி
  5. 6 கேரட்
  6. 30 பீன்ஸ்
  7. 1 கப் பட்டாணி
  8. 3_1/2 கப் தண்ணீர்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 150 மில்லி கடலெண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  13. 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  14. சிறிதுகறிவேப்பிலை
  15. சிறிதுகொத்தமல்லி தழை
  16. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் பட்டாணி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும்

  3. 3

    பத்து நிமிடம் கழித்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  4. 4

    கொதித்ததும் மக்காச்சோள ரவை சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    தண்ணீர் இழுத்து ரவை வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி கிளறி பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் மூடி வைக்கவும்

  6. 6

    பின் நெய் விட்டு கிளறி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான மக்காச்சோள ரவை உப்புமா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes