பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)

#Birthday1
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த,பண்டை காலம் முதல் செட்டி நாட்டில் செய்யக்கூடிய காளான் குழம்பு இங்கு நான் செய்து பகிர்ந்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த குழம்பு நல்ல மணத்துடன் அசைவக் குழம்பு சுவையில் உள்ளது.
பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)
#Birthday1
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த,பண்டை காலம் முதல் செட்டி நாட்டில் செய்யக்கூடிய காளான் குழம்பு இங்கு நான் செய்து பகிர்ந்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த குழம்பு நல்ல மணத்துடன் அசைவக் குழம்பு சுவையில் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
காளானை கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கியது, மல்லி, கறிவேப்பிலை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். கல் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 7
தக்காளி மசிந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- 8
குழம்பு கொதிக்க தொடங்கியதும் நறுக்கி வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்க்கவும்.
- 9
குழம்பை கலந்து விட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
- 10
குழம்பு கொதித்து காளான் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்த மல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான பாரம்பரிய காளான் குழம்பு தயார்.
- 11
தயாரான குழம்பை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 12
அம்மாவுக்கு பிடித்த இந்த பாரம்பரிய செட்டி நாட்டு காளான் குழம்பு மிகவும் சுவையாகவும், நல்ல மணத்துடன் இருந்தது.
- 13
அசைவப் பிரியர்களுக்கு இந்த குழம்பு ஒரு வரப்பிரசாதம். அதே சுவை, அதே மணம்.
- 14
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.#Wt3 Renukabala -
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
காளான் பள்ளிபாளையம் (Mushroom Pallipalayam)
காளான் பள்ளிபாளையம் காரசாரமான சுவையான கிரேவி.சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Vattaram Renukabala -
மஷ்ரூம் குழம்பு (Mushroom kulambu recipe in tamil)
#ve அசைவம் சாப்பிடதாவர்கள் ஏற்ற காளான் குழம்பு. அப்படியே நாட்டு கோழி சுவையில் Riswana Fazith -
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)
#tkபச்சை மிளகு கிடைக்கும் போது இந்த மிளகு புளிக்குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்,சத்துக்கள் நிறைந்தது. Renukabala -
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala
More Recipes
கமெண்ட் (3)