முருங்கையிலை கஞ்சி/சாதம்(moringa leaves rice recipe in tamil)

#birthday1
இது என் அம்மாவுக்கு பிடித்த ரெசிபி. சிறு வயதில் இதை செய்து தரும்போது,ஏன் இந்த கஞ்சி செய்தீர்கள்? எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினால்,அந்த காலத்தில்,நாங்களெல்லாம்....என்று ஆரம்பித்து விடுவார்.எப்பொழும்,இதை ரேஷன் அரிசியில் தான் செய்வார்கள்.அந்த அரிசியில் கூட சுவையாக இருக்கும் என்பதுதான் உண்மை..இன்று அம்மா வீடு சென்றால் அனைவரும் விரும்பி கேட்கும் ரெசிபியாக மாறிவிட்டது.
சமையல் குறிப்புகள்
- 1
1கப் அரிசியில் சாதம் வடித்து செய்வதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுமோ அதை விட 2டம்ளர் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.கூடுதலாக 1டம்ளர் இருந்தாலும் தவறில்லை.
பொதுவாக 1கப் அரிசியில் சாதம் சாதம் செய்ய 3/4பானை
👇 தேவைப்படும்.இப்பழுது,நான் முழுவதுமாக எடுத்துளேன். - 2
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைக்க கொடுத்துள்ளதை
அரைத்துக் கொள்ள வேண்டும்.அரிசியை 20நிமிடங்கள் ஊற விடவும்.முருங்கையிலையை கழுவிக் கொள்ளவும்.
- 3
அடி கனமான பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள தண்ணீர் சேர்த்து,அதனுடன் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் முருங்கையிலை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 4
நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும்,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
சாதம் வேக ஆரம்பித்ததும்,தண்ணீர் வற்ற ஆரம்பித்து விட்டது.எப்பொழுதும் சாப்பிடும் பக்குவத்தில் வேக வைக்கவும்.
- 6
சாதம் நன்றாக வெந்ததும், நாம் அரைத்து வைத்த விழுது மற்றும்
மிளகாய் தூள் சேர்த்து,பச்சை வாசம் போக நன்றாக கொதிக்க விடவும்.உப்பு சரிபார்க்கவும். - 7
இன்னும் 5-7 நிமிடங்கள், சாதம் வேக வைக்க வேண்டும்.இப்பொழுது இருக்கும் தண்ணீர் போதுமானதாக இருந்தது.
தண்ணீர் தேவையெனில் 1டம்ளர் சுடு தண்ணீர் சேர்க்கலாம்.
- 8
7 நிமிடங்களில்,சாதம் இன்னும் குழைவாக வெந்து விடும்.முழுவதும் தண்ணீர் வற்ற விடாமல்,கொஞ்சம் 'ஜூஸி'யாக இருந்தால் தான் சுவையாக இருக்கும். அடுப்பை அணைத்து இறக்கிவிடலாம்.
தாளிப்பு தேவை இல்லை.
- 9
குழிவான தட்டில் போட்டு இளஞ்சூடாக இருக்கும் போதே ஸ்பூன் வைத்து சாப்பிட சொல்வார்கள் அம்மா.அம்மாவுடன் சேர்ந்தே சாப்பிடுவோம். மிகவும் சுவையாக இருக்கும்.முயன்று பாருங்கள்.
- 10
அவ்வளவுதான்.சுவையான, சத்தான முருங்கையிலை கஞ்சி/சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பழைய சாதம்(palaiya saadam recipe in tamil)
#birthday1பொதுவாக,பிள்ளைகளுக்கு இட்லி செய்து தந்து,மீதி ஆன சாப்பாட்டை பழைய சாதமாக மாற்றி சாப்பிடுவது தான் அம்மாக்களின் வழக்கம். என் அம்மாவும் அப்படித்தான். ஏன்? என்று கேட்டால்,இது தான் அமிர்தம்.வயிறும் நிரம்பும்,என்பார்..அது உண்மை தானே! Ananthi @ Crazy Cookie -
-
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena -
-
தாளித்த சாதம்
தினமும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு ,ஒரு மாறுதலாக, என் கணவர் எனக்கு சொல்லி கொடுத்த ரெசிபி இது. Ananthi @ Crazy Cookie -
-
-
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#birthday1#week1என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த குழம்பு தான் இந்த வத்தக்குழம்பு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள். Sahana D -
அரிசி கஞ்சி மற்றும் கடுகு சட்னி (Arisi kanji & kaduku chutney recipe in tamil)
#india2020#momஅந்த காலத்தில் காலை உணவே இந்த மாதிரியான கஞ்சி தான் சாப்பிடுவார்கள். நோய் நொடி இல்லாமல் இருந்தார்கள். இப்ப இருக்கற காலத்தில இதெல்லாம் மறந்தே போச்சு. நம்ம குழந்தைகள் எல்லாம் கஞ்சி என்றால் என்னனு கேட்பார்கள். அந்த நிலையில் மாறி இருக்கிறது. காய்ச்சல் என்றாலே இந்த கஞ்சி தான் எங்கள் வீட்டில் செய்வோம். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
பிடி கொழுக்கட்டை
என் தோழிக்கு மிகவும் பிடித்த டிஃபன்.என் புகுந்த வீட்டு ஸ்பெஷல் ரெசிபி. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அருமையான டிஃபன்.# ஸ்நாக்ஸ் Meena Ramesh -
கமெண்ட் (2)