மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#DG
மாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋

மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)

#DG
மாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 மாங்காய்
  2. 3 ஸ்பூன் வத்தகுழம்பு பொடி
  3. நெல்லிக்காய் அளவுபுளி
  4. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  7. 1/4 ஸ்பூன் பெரும்காயம்
  8. கருவேப்பிலை
  9. 1/2 ஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

12 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அதிகம் புளிப்பி ல்லாத மாங்காயை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டிக்கவும்.

  2. 2

    ஒரு வானலி ஸ்டவ்வில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள்தூள்,கருவேப்பிலை,2 வரமிளகாய் தாளித்து அத்துடன் மாங்காயை போட்டு நன்றாக கிளறவும்.

  3. 3

    மாங்காயின் நிறம் மாறி வந்ததும் அத்துடன் புளி கரைசல், மற்றும் தேவயானதண்ணி சேர்த்து கொதிக்க விடவும்.5 நிமிடம் மூடி வேக விடவும்.

  4. 4

    மாங்காய் கொதித்து நன்றாக வெந்து மசிந்து வரும் சமயம் வத்தக்குழம்பு பொடி சேர்த்து, தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்

  5. 5

    குழம்பு கொதித்து வத்தி 1/2 பங்கு வந்ததும் 1/2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து மீதி எண்ணெய் ஊற்றி ஸ்டாவ்வில் இருந்து இறக்கிவிடவும்.. ரொம்ப ருசியான மாங்காய் கார குழம்பு தயார்.. சூடான சாத்தத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் அருமையான சுவையுடன் இருக்கும்..... தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்பினேஷன்...குறிப்பு - மாங்காயின் புளிப்பு பாத்து புளி சேர்த்துக்கவும்.. அதிகம் புளி இல்லாமல் பழுத்தும் பழுக்காத்ததுமான மாங்காய் நன்றாக இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes