*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe,

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  1. 1/4 கப்பொட்டுக் கடலை
  2. 1/4 கப்தேங்காய் துண்டுகள்
  3. 3ப.மிளகாய்
  4. 1பெரிய வெங்காயம்
  5. கொட்டை பாக்களவுபுளி
  6. 1 டம்ளர்தண்ணீர்
  7. 1/2 ஸ்பூன்தாளிக்க:- கடுகு
  8. 1/2 ஸ்பூன்க.பருப்பு
  9. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  10. 3/4 டீ ஸ்பூன்ம.தூள்
  11. 1 ஸ்பூன்சாம்பார் பொடி
  12. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
  13. 1 ஸ்பூன்அலங்கரிக்க:- நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
  14. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயை துண்டுகளாக்கவும்.

  2. 2

    சிறிய மிக்ஸி ஜாரில், பொட்டுக் கடலை, பல.மிளகாய், தேங்காய், புளி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  3. 3

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், க.பருப்பை போடவும்.

  4. 4

    பருப்பு சிவந்ததும், வெங்காயம், ம.தூள், கல் உப்பு போட்டு நன்கு வதக்கினதும், சாம்பார் பொடி, கறிவேப்பிலை போடவும்.

  5. 5

    அடுத்து அரைத்த விழுது, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.

  6. 6

    பிறகு பௌலுக்கு மாற்றி மேலே கொத்தமல்லி தழை போட்டு கலக்கவும்.

  7. 7

    இப்போது, சுவையான, சுலபமான,வித்தியாசமான,* இட்லி சாம்பார்*தயார்.இதில் தக்காளிக்கு பதில் புளியும், சாம்பார் பொடியும் சேர்த்துக் கொண்டேன். சுவை அபாரமாக இருந்தது.இட்லிக்கு நல்ல காம்பினேஷன். செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes