முட்டை குழம்பு(egg curry recipe in tamil)

Thaqiba
Thaqiba @Thaqiba
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 வேக வைத்த முட்டை
  2. 1 கப் சின்ன வெங்காயம்
  3. 3 தக்காளி பழம்
  4. 1/4 கப் கெட்டி தயிர்
  5. 1 குழி கரண்டி ஆயில்
  6. தேவைக்கேற்ப மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள், உப்பு
  7. 1/2டீ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1டீ ஸ்பூன் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
  9. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் பேஸ்ட்
  10. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேகவைத்த முட்டையை நடுவில் சிறிய கீறல்கள் போட்டுக் கொள்ளுங்கள். அப்போதுதான் முட்டையில் மசாலா நன்றாக போய் சேரும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடான பின் வெங்காயத்தை அரைத்து இந்த விழுதை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். இதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும் கூடவே முட்டைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    வதங்கி வந்தபின் மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் கூடவே கரம் மசாலாத்தூள் இதோடு கொஞ்சம் தயிர் ஊற்றி வதக்கவும்.

  3. 3

    பச்சை வாசனை போன பின் கடைசியில் தக்காளி பேஸ்ட் மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு தேவைக்கு ஏற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thaqiba
Thaqiba @Thaqiba
அன்று

Similar Recipes