நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#Ct - Merry X'Mas 🌲🎄✨️
3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி.....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 - 45 நிமிடங்
15 பரிமாறுவது
  1. 1/2 கப் பாதாம்
  2. 1/2 கப் முந்திரி
  3. 1/4 கப் பிஸ்தா
  4. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1 கப் மைதா
  6. 1/2 - 3/4 கப் சக்கரை
  7. 1/2 கப் நெய் + 1/4 கப் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 - 45 நிமிடங்
  1. 1

    முதலில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கவும். மைதா மாவை 2 ஸ்பூன் நெய் விட்டு, தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 10 நிமிடத்துக்கு ஊற விடவும்.சக்கரை ஒரு கம்பி பதத்துக்கு காய்ச்சி எடுக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம், முந்திரி, பிஸ்தா, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பவுடர் செய்துக்கவும்

  3. 3

    தேங்காய் துருவலை ஈரம் போக லேசாக வறுத்து சேர்த்துக்கவும்.

  4. 4

    பிசைந்த மாவை ஒரேபோல் 4 பங்காக பிரித்து உருட்டிக்கவும். அதை சப்பாத்தி கட்டை வைத்து சப்பாத்தி போல் கனம் குறைத்து பரத்தி விரித்து க்கவும். எல்லா மாவேன் இதேபோல் செய்துக்கவும்

  5. 5

    ஒரு சப்பாத்தியை எடுத்து அதற்க்கு மேல் நட்ஸ் பவுடர் தூவி மேலாக தண்ணி லேசா தெளித்த பிறகு அதன் மேல் இன்னொரு சப்பாத்தி வைத்து நன்கு அழுத்தி விட்டு முதலில் செய் ததுபோல் 3-4 சப்பாத்தி வரை ஒண்ணுக்கு மேல் ஒண்ணாக அடுக்கி வைத்து இதேபோல் லேயராக் செய்துக்கவும்

  6. 6

    அதன் பிறகு அதை அப்படியே டைட்டாக பாய் சருட்டு வதுபோல் ரோல் செய்து இரண்டு ஓரங்களையும் ஒட்டி விட்டு, ஒரே போல் சின்ன துண்டாக கட் செய்துக்கவும்

  7. 7

    அதை கை வைத்து அழுத்தி விட்டு ஓவல் ஷேப்பில் எல்லா வற்றையும் செய்துக்கவும். ஸ்டவ்வில் நெய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான சூட்டில் ஒவொன்றாக் எண்ணையில் போட்டு இரண்டு பக்கவும் வேக விட்டு பொரித்தெடுக்கவும்

  8. 8

    எல்லாவற்றையும் இதற்போல் பொறுமையாக சிவக்க மொறு மொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

  9. 9

    பொரித்தடுத்தத்தை சூடான் சக்கரை பாகில் போட்டு இரண்டு ப க்கவும் புரட்டி 1/2 நிமிடம் விட்டு எடுத்து தட்டில் அடுக்கி ஆற விடவும்.5- 10 நிமிடத்தில் செட் ஆகி விடும்

  10. 10

    இப்பொழுது சுவையான நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட் தயார்.... பாதுஷாவை மிஞ்சும் ருசியில் இருக்கும் நட்ஸ் வீல் ரோல் செய்து எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தில் பகிர்ந்து கொண்டாடி மகிழவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes