*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#FR
இது எனது முதல் முயற்சி.உருளைக்கிழங்கில் நிறைய ரெசிபி செய்து இருக்கின்றேன். ஆனால் பொடிமாஸ் செய்து பார்க்கவில்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)

#FR
இது எனது முதல் முயற்சி.உருளைக்கிழங்கில் நிறைய ரெசிபி செய்து இருக்கின்றேன். ஆனால் பொடிமாஸ் செய்து பார்க்கவில்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  1. 1/2 கிஉருளைக்கிழங்கு
  2. 2 ஸ்பூன்ப.பட்டாணி
  3. 1 1/2 ஸ்பூன்தனி மி.தூள்
  4. 1டீ ஸ்பூன்ம.தூள்
  5. தாளிக்க:-
  6. 1 டீ ஸ்பூன் கடுகு
  7. 1 ஸ்பூன்உ.பருப்பு
  8. 1/2 ஸ்பூன்க.பருப்பு
  9. 2சி.மிளகாய்
  10. 2 ஆர்க்குகறிவேப்பிலை
  11. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  12. ருசிக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    உருளை கிழங்கை சுத்தம் செய்து தோலை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு தாளிக்கவும்.

  4. 4

    தாளித்ததும்,தண்ணீரை நன்கு வடித்து விட்டு, உருளைகிழங்கை சேர்த்து, மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

  5. 5

    பாதி வெந்ததும் பட்டாணியை சேர்த்து வேகவிடவும்.

  6. 6

    பிறகு, ம.தூள், மி.தூள், உப்பு போட்டு வதக்கவும்.

  7. 7

    எண்ணெயிலேயே கிறிஸ்பாக வெந்ததும், கறிவேப்பிலையை சேர்க்கவும்.

  8. 8

    1நிமிடம் வெந்ததும், ஒன்றுசேர கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு பிளேட்டிற்கு மாற்றவும்.

  9. 9

    இப்போது, சுவையான, சுலபமான,*பொட்டேட்டோ பொடிமாஸ்*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes