பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#மதிய உணவுகள்
எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. பாலக்கீரை மசியல் உண்டாக்க தேவையானவை :
  2. பாலக்கீரை- 2 கட்டு
  3. தண்ணீர் - 1/4 கிளாஸ்
  4. சின்ன வெங்காயம் - 3
  5. பச்சைமிளகாய் - 2
  6. சீரகம் - 1/2 டீஸ்பூன்
  7. மஞ்சள் பொடி-1/2 டீஸ்பூன்
  8. பூண்டு - 3 பல்
  9. உப்பு தேவையான அளவு
  10. வற்றல் மிளகாய் - 1
  11. பெரிய வெங்காயம் அறிந்தது - 1/2
  12. தக்காளி அறிந்தது - 1/2
  13. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  14. கொத்துமல்லி பொடி-1/4 டீஸ்பூன்
  15. கரம்மசாலா பொடி -1/4 டீஸ்பூன்
  16. சேனைக்கிழங்கு பொரியல் உண்டாக்க தேவையானவை :
  17. சேனைக்கிழங்கு சிறிதாக அறிந்தது - 350 gm
  18. இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  19. மஞ்சள் பொடி -1/2 டீஸ்பூன்
  20. மிளகாய் பொடி- 1 டீஸ்பூன்
  21. பட்டை-1 சிறிது
  22. கிராம்பு -1
  23. சின்ன வெங்காயம் சிறிதாக அறிந்தது- 4/5
  24. வற்றல்மிளகாய்- 1
  25. உப்பு தேவையான அளவு
  26. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  27. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    பாலக்கீரை நன்றாக கழுவி தண்ணீர் வற்றியவுடன், ஒரு பாத்திரத்தில் 1/4 கிளாஸ் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, பச்சைமிளகாய், பூண்டு- 3, சின்ன வெங்காயம், உப்பு தேவையான அளவு சேர்த்து வேகவைக்கவும்

  2. 2

    பத்து முதல் பதினைந்து நிமிடம் பாலக்கீரை வெந்த்தவுடன், சுடாறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்

  3. 3

    இனி கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், தக்காளி, வெங்காயம், சேர்த்து வாட்டவும்

  4. 4

    1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, கொத்துமல்லி பொடி, 1/4 டீஸ்பூன் கரம் மசாலா பொடி சேர்த்து வாட்டவும்

  5. 5

    பின்னர் அதில் அரைத்து வைத்த பாலக்கீரை சேர்க்கவும், ஐந்து நிமிடம் வைத்து பின்னர் இறக்கியவுடன் கீரிம் சேர்க்கவும்

  6. 6

    இனி சேனைக்கிழங்கு, தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்

  7. 7

    வேகவைத்த சேனைக்கிழங்கு இனி தாழித்து எடுக்க இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சிறிதாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை, இஞ்சிபூண்டு விழுது, பட்டை கிராம்பு, வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  8. 8

    இதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி தேவையான அளவு உப்பு சேர்க்கவும், பின்னர் வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து நன்றாக சிறிய தீயில் வைத்து வறுவல் போல ஆகும் வரை வைத்து எடுக்கவும்

  9. 9

    சுடான சாப்பாடு உடன் பாலக்கீரை மசியல் மற்றும் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல் சேர்த்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
அன்று
At present Riyadh, Saudi Arabia

Similar Recipes

More Recommended Recipes