தக்காளி  மற்றும் ஸ்வீட் கார்ன் புலாவ்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் பிரியாணி அரிசி
  2. 1.5 கப் தண்ணீர்
  3. 1/2 கப் உதிர்த்த ஸ்வீட் கார்ன்
  4. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. 1டீஸ்பூன் சீரகம்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 1/2டீஸ்பூன் மஞ்சள் பொடி
  8. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1 பிடி கொத்தமல்லி இலை
  11. அரைக்க
  12. 2 தக்காளி
  13. 2 பச்சை மிளகாய்
  14. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  15. 2 துண்டு பட்டை
  16. 2 கிராம்பு
  17. 2 ஏலக்காய்
  18. 1டீஸ்பூன் கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம்,மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் கார்ன், மிளகாய் தூள் சேர்த்து லேசாக வதக்கவும்

  4. 4

    பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். அதனுடன் களைந்து வைத்த அரிசி மற்றும் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடவும்

  5. 5

    இரண்டு விசில் வந்ததும் சிம்மில் ஐந்து நிமிடங்கள் வரை வைத்து அணைக்கவும்

  6. 6

    கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes