மீதமான சாதத்தில் வடை

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

மீதமான சாதத்தில் வடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் மீதமான சாதம்
  2. 2ஸ்பூன் ரவை
  3. 2மேசைகரண்டி அரிசி மாவு
  4. 1 வெங்காயம்
  5. 1 பச்சை மிளகாய்
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. சிறிதளவுகொத்தமல்லி
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4ஸ்பூன் மிளகு
  10. 2ஸ்பூன் தயிர்
  11. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சாதத்தை மிக்ஸில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு மையாக அரைத்து கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் ரவையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு பவுலில் அரைத்த சாதம், ரவை, அரிசி மாவு, தயிர், உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, கொத்தமல்லி, வெங்காயம் இவற்றை சிறிதாக நறுக்கி சேர்த்து வடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு கையை தண்ணீரில் நனைத்து கொண்டு ஒவ்வொரு உருண்டைகளாக உருட்டி உளுந்தவடை செய்வது போல நடுவில் ஓட்டை போட்டு கொள்ளவும்.

  4. 4

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். ஒவ்வொரு வடை போடும்ன் கையை தண்ணீரில் நனைத்து கொள்ளவும்.

  5. 5

    சூப்பரான சுவையான பார்ப்பதற்கு உளுந்தவடை போன்று மீதமான சாதத்தில் வடை தயார். இந்த வடை மேல் பகுதி மிகவும் கிரிஸ்பியாக உள்ளே மென்மையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

கமெண்ட் (10)

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
தயிர் சேர்க்காமல் செய்யமுடியுமா sis🤔

Similar Recipes