பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)

பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கட்டு பாலக் கீரை
  2. 200 கிராம் துவரம் பருப்பு
  3. 15 சின்ன வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 2மிளகாய் வத்தல்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு எண்ணெய்
  9. கடுகு,உளுந்து சிறிதளவு
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. ஒரு ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் துவரம் பருப்பை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.அதில்,10 சின்ன வெங்காயம்,தக்காளி, மஞ்சள்த்தூள் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பாலக் கீரையை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். 2 மிளகாய் வத்தல் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின்பு பாலக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  5. 5

    கீரை வெந்தவுடன் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து கிளறிக் கொள்ளவும்

  6. 6

    நன்றாக கிளறி கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு இறக்கிக் கொள்ளவும். பாலக்கீரை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes